அதிமுகவின் இரு அணிகள் இணைவது நல்லதா? - எம்.பாரூக் பதில்கள்



அதிமுகவின் இரு அணிகள் இணைவது கட்சியை பொறுத்தவரையில் நல்லதுதான். அது இழந்த கட்சியின் சின்னத்தை மீட்டு தரும். தொண்டர்களை உற்சாகப்படுத்தும். அதே சமயம் இந்த ஆட்சி எந்த பாதையில் செயல்படப்போகிறது என்பதை பொறுத்துதான் மக்களின் நலன் சார்ந்து இயங்குமா என்று சொல்ல முடியும். 

தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓ.பன்னீர்செல்வம் பக்கம் பெரிய அளவில் வலுசேராததால் தினகரன் பக்கம் இருந்த அமைச்சர்களை, மக்கள் பிரதிநிதிகளை ஏதோ ஒரு வகையில் நிர்பந்தப்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தள்ளுகிறது பாஜக. 

இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் அணியை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அதிமுகவையும் தனது கட்டுக்குள் வைக்க அது முயலுகிறது. இது தமிழகத்திற்கு பாரிய பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்தும். இரு அணிகள் இணைந்தாலும் தமிழக நலனிற்கு எதிராக செயல்படும் மத்திய அரசை எதிர்த்து குரல் எழுப்பும் வலிமை அக்கட்சியில் யாருக்கும் இல்லை. அது ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது. கட்சியும் அப்படிதான்.

- எம்.பாரூக்
அதிமுகவின் இரு அணிகள் இணைவது நல்லதா? - எம்.பாரூக் பதில்கள் அதிமுகவின் இரு அணிகள் இணைவது நல்லதா? - எம்.பாரூக் பதில்கள் Reviewed by நமதூர் செய்திகள் on 05:37:00 Rating: 5

No comments:

Powered by Blogger.