விவசாயக் கடன் தள்ளுபடி இல்லை: மத்திய அரசு!
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக போராடி வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கேட்டு போராடி வரும் இதே வேளையில், பயிர்க்கடனை ரத்து செய்யும் எண்ணமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 11ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, ‘இந்தியா முழுவதும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருவதால், மத்திய அரசு பயிர்கடன் வழங்கும் திட்டம் ஏதும் வைத்துள்ளதா’ என உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமாரி கங்வார், ‘விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. எனினும், விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.
விவசாயக் கடன் தள்ளுபடி இல்லை: மத்திய அரசு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:15:00
Rating:
No comments: