தேயிலை தொழிலாளர் ஊதியம்: தீர்வு கிட்டுமா?

மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தேயிலை தோட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் ஊதிய உயர்வு குறித்த பிரச்னைகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகத்துடன் பேசி தீர்வு காணும் முறை 1977ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. இதன்படி 2014ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் பழைய ஊதிய உடன்படிக்கை முடிவடைந்தது.
புதிய பேச்சுவார்த்தையின் மூலம் ஊதிய உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளைத் தேயிலை தொழிலாளர் சங்கம் முன்வைத்தது. இந்தக் கோரிக்கைகளை ஏற்க தோட்டக்காரர்கள் மறுத்தனர். இதனால் மாநில அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனாலும் இந்தக் குழுவினால் இரண்டு ஆண்டுகள் கடந்தும் எந்த முடிவும் எட்ட முடியவில்லை.
தொழிலாளர் பிரதிநிதிகள், தோட்டக்காரர்களைக் கொண்டு சிறப்பு குழுக்கள் அமைத்து மாநில அரசு ஒன்பது சுற்று பேச்சுவார்த்தைகளுக்கும் மேலாக நடத்திவிட்டது. எனினும் இதுவரையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்த தேயிலைத் தொழிலாளர்கள் மூன்று ஆண்டுகளாகக் காத்துக்கிடக்கின்றனர். இந்தப் பிரச்னையால் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டு, தேயிலை உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை அரசால் எந்த முடிவும் எட்டப்படாமல் இப்பிரச்சனை முற்றிலும் மறக்கப்பட்டுள்ளது.
தேயிலை தொழிலாளர் ஊதியம்: தீர்வு கிட்டுமா? தேயிலை தொழிலாளர் ஊதியம்: தீர்வு கிட்டுமா? Reviewed by நமதூர் செய்திகள் on 04:11:00 Rating: 5

No comments:

Powered by Blogger.