மலப்புரம் பார்முலா! -- ஆரூர்.யூசுப்தீன்.
திருமங்கலம் பார்முலா என்று தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடுவது நம் அடிக்கடி கேட்டது தான். ஆனால் இன்றைய புதிய தலைமுறைக்கு அது குறித்து தெரியுமா என்று தெரியவில்லை. 2009 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் வீர இளவரசன் இறந்ததினால் அந்த தொகுதி இடைதேர்தலை சந்திக்க நேரிட்டது. அப்போதை ஆளும் கட்சியாக இருந்த திமுக எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் மு.க.அழகிரி தலைமையில் பணி செய்தது.வெற்றியும் பெற்றது.
அந்த காலகட்டத்தில் அதிமுக தரப்பு திமுக பெருமளவில் பணம்பட்டுவாடா செய்தது என்று குற்றம் சாட்டியது. சாட்சியம் இல்லாததினால் அந்த குற்றசாட்டு விசாரணைக்கு வரவில்லை. இருந்தபோதிலும் எங்கையெல்லாம் ஒரு கட்சி அதிகளவில் ஓட்டுக்கு பணம்பட்டுவாடா கொடுத்து தேர்தலை சந்திக்கிறதோ அக்கட்சியின் அரசியல் செயல்பாடுகளை திருமங்கலம் பார்முலா என்று அரசியல் பார்வையாளர்கள் தொடர்ந்து குறிப்பிடுகிறார்கள்.
இதுபோன்ற ஒரு புதிய பார்முலா இஸ்லாமிய அல்லது இஸ்லாமிய நலன் பயக்கும் அரசியல் கட்சிக்கு ஓர் பார்முலா உருவாக்கபட்டுள்ளது. அதற்கு மலப்புரம் பார்முலா என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். நடந்து முடிந்த மலப்புரம் நாடாளுமன்ற இடைதேர்தலில் இலட்ச வாக்குகள் வித்தியாசத்தில் முஸ்லீம் லீக் வெற்றி பெற்றது தான் பலருக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
அனால் இதற்கு பின் உள்ள பல விசயங்களை நாம் பார்க்க தவறி விட்டோம்.
கேரளாவில் செயல்பட்டுவரும் மனோரமா இணையதளம் ஓர் ஆய்வு கட்டுரையை வெளியிட்டது. அதில் நடைபெற இருக்கும் தேர்தலில் முஸ்லீம் லீக் வேட்பாளர் வெற்றி பெற சவாலாக இருக்கும் விசயங்களை அதில் குறிப்பிட்டதோடு அந்த தொகுதியில் உள்ள SDPIயின் நிலைப்பாடு குறித்தும் அவர்களின் 50,000 வாக்குகள் யாருக்கு போக போகிறது என்று அதில் அலசியிருந்தது. அதேபோல் WPI யின் 30,000 வாக்குகளும் யாருக்கு போக போகிறது என்ற கேள்வியும் பலர் மத்தியில் எழுந்திருந்தது.
இறுதியில் இருகட்சிகளும் தங்களுடைய ஆதரவு நிலையை வெளிப்படையாக வாக்குகள் மூலம் காட்டினர். சுமார் 1,72,000 வாக்குகள் வித்தியாசத்தில் குஞ்சாலிகுட்டி வெற்றி பெற்றார்.
வாய்ப்புகள் இருந்தும் தேர்தலில் போட்டியிடாமல் SDPI மற்றும் WPI கட்சிகள் போட்டியிட்டால் வாக்குகள் சிதறும் அதனால் முஸ்லீம் லீக் தோல்வியடையும் என்ற எண்ணத்தில் போட்டியிடுவதை தவிர்த்து கொண்டது. இது தான் இன்றைய இந்திய இஸ்லாமிய அல்லது இஸ்லாமிய நலம் விரும்பும் கட்சிகளுக்கு முன் உதாரணம். நாம் போட்டியிடுவது முக்கியமல்ல மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பது தான் பிரதான இலக்கு. சில இடங்களில் அவர்களை விட நாம் சிறந்த தேர்வாக கூட இருக்க கூடும்.
எங்கு யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறதோ அங்கு களம் காண்பது தான் சிறந்தது. அகிலம் என்ற பெயர் காரணத்திற்காக எல்லா மாநிலங்களிலும் களம் கண்டால் அது நேரடியாக வேறொரு கட்சியின் இலாபமாக ஆகிவிடும். இது தான் உத்திரபிரதேசத்தில் நடைபெற்றது.
ஹைதிராபாத்தை மையமாக கொண்டு செயல்படும் Siasat என்ற இனையதளம் இதுகுறித்து தெளிவாக விளக்கியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் எம்.ஐ.எம் தனித்து பல இடங்களில் களம் கண்டால் அது பாஜகவின் வெற்றிக்கு வழிவகுக்கும் அதனால் எம்.ஐ.எம்.கட்சி தனது செயல்பாடுகளை முன்குட்டியே ஆராய்ந்து களம்காண வேண்டும் என்று.
பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் முஸ்லிம் வேட்பாளர்களை கூட களத்தில் இறக்கி விடுவார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். உதாரணமாக மலப்புரம் தொகுதியில் முஸ்லீம் லீக் வேட்பாளர் பெயர் பி.கே.குஞ்சாலிகுட்டி அதே பெயரில் சுயோட்சை வேட்பாளரும் களத்தில் இறக்கபட்டுள்ளார்.
இதுபோன்ற பல தகிடு திட்டங்களுக்கு மத்தியில் தான் வெற்றி பெற முடியும். மலப்புரத்தில் நடைபெற்ற அந்த பார்முலா இந்தியாவின் மற்ற பாகங்களுக்கும் பொருந்தும். இதனை பொருந்தி கொள்ள அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும்.
தமிழக அரசியல் நிலவரம் இந்த பார்முலாவுக்கு ஏற்றது தன் என்றாலும் இதுவரைக்கும் ஆட்சி செய்த இரு கட்சியிகளின் கட்டுபாட்டுகளை தளர்த்தி இஸ்லாமிய அரசியல் கட்சிகள் தனித்து களம் காண்பது என்பது சற்று சவாலானது தான். கடந்த கால வரலாற்றின்படி கூட்டணியில் சேராமல் போனதற்கு கட்சியை பிளவுபடுத்தியது நாம் அறிவோம். அதேபோல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு களம் காண வேண்டிய கட்டாயமும் அக்கட்சிகளுக்கு இருக்கிறது.
நமது சிந்தனை என்பது பறந்து விரிந்து இருக்க வேண்டிய காலமிது. பாஜக எங்கு நேரடியாக இறங்க வேண்டுமோ அங்கு நேரடியாக களம் இறங்கும் எங்கு மாற்று சக்தியை களம் இறக்க வேண்டுமோ அங்கு மாற்று சக்தியை களம் இறக்கும். இதற்கு உதாரணம் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி மற்றும் லட்டர்போடு அமைப்புகள் போன்றவைகளை முன் களத்தில் இறக்கி விட்டு தான் பாஜக களம் இறங்கும். முன் ஒரு கலவரம் பின் அதன் மூலம் அரசியல் இது தான் தமிழக பாஜகவின் ஸ்டைல்.
மாவட்டம்,மாநிலம் என்று அடைபட்டுவிடாமல் தேசியம் என்ற நமது உச்சபட்ச எல்லையை நமது பார்வை பரவ வேண்டும். அதற்கு பல மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் உடன் பரஸ்பர உறவு இருந்திருக்க வேண்டும் அல்லது உருவாக்கத்தில் முயற்சி செய்ய வேண்டும்.
எந்த தொகுதியில் யாருக்கு அதிக வாக்கு சதவிகிதம் உள்ளது என்ற ஆய்வின் அடிப்படையில் களம் கண்டால் உடனடி வெற்றி கிடைக்கவிட்டலும் தாமதமான தொடர் வெற்றி கிடைக்கும்.
--ஆரூர்.யூசுப்தீன்.
மலப்புரம் பார்முலா! -- ஆரூர்.யூசுப்தீன்.
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:18:00
Rating:
No comments: