மீண்டும் வாக்குச்சீட்டு முறை : காங்கிரஸ்!

மீண்டும் வாக்குச்சீட்டு முறை : காங்கிரஸ்!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் முறை வரும்வரை, மீண்டும் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டுமென காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி நிகழ்வு ஒன்றில் பேசும்போது, ‘வாக்களிக்கும் எந்திரங்களில் முறைகேடு என்பது கற்பனைக் கதை’ என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து, ஏப்ரல் 17ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, ’2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள 15 பக்க தீர்ப்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது நம்பிக்கை வரவேண்டுமென்றால் அதற்கு நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான அத்தாட்சி சீட்டு வழங்க வேண்டும்.அப்படி இல்லையென்றால் ஏன் நாம் மறுபடியும் வாக்குச்சீட்டு முறைக்கு மாறக்கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தது.
நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் எந்திரத்தை வாங்குவதற்காக மத்திய அரசிடம், தேர்தல் ஆணையம் கேட்ட ரூ.3000 கோடி நிதிக்கு ஏன் இன்னும் எதுவும் பதில் சொல்லவில்லை. இப்படியே சென்றால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்குவதற்கு குறைந்தபட்சம் 150 ஆண்டுகளாவது ஆகும். ஏற்கனவே வாக்குப்பதிவில் மின்னணு இயந்திரங்களை பயன்படுத்திய 30 நாடுகளில் தற்போது இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மட்டுமே பயன்படுத்துகின்றன. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள் இதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பியுள்ளன. குறிப்பாக, பாஜக மூத்த தலைவர் அத்வானியே குறைகூறியுள்ளார். எனவே, நாம் யாருக்கு வாக்களித்தோம் என்று தெரியும் முறை வரும்வரை மீண்டும் வாக்குப்பதிவு எந்திரத்தையே பயன்படுத்த வேண்டும்' என்று தெரிவித்தார்.
மீண்டும் வாக்குச்சீட்டு முறை : காங்கிரஸ்! மீண்டும் வாக்குச்சீட்டு முறை : காங்கிரஸ்! Reviewed by நமதூர் செய்திகள் on 22:04:00 Rating: 5

No comments:

Powered by Blogger.