மாணவர்களுக்குப் பட்டமளிப்பு: ராமதாஸ் கேள்வி!

மாணவர்களுக்குப் பட்டமளிப்பு: ராமதாஸ் கேள்வி!

‘பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமித்த பின்பே பட்டமளிப்பு விழாக்களை நடத்த வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஏப்ரல் 22ஆம் தேதி சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால், 37ஆவது பட்டமளிப்பு விழாவைத் திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. இதனால் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் படித்து முடித்தவர்களுக்குப் பட்டங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு படிப்பை முடித்த அனைவருக்கும் மே மாதம் முதல் வாரத்தில் பட்டமளிப்பு விழாவை நடத்தவும், துணைவேந்தரும், துணைவேந்தரின் கையெழுத்தும் இல்லாமலேயே பட்டங்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்படும் பட்டம் செல்லத்தக்கது என்பதற்கான அடையாளமே துணைவேந்தரின் கையொப்பம்தான். துணைவேந்தர் கையெழுத்து இல்லாமல் பட்டங்கள் வழங்கப்படும் பட்சத்தில், வெளிநாடு அல்லது வெளிமாநில பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்க விண்ணப்பிக்கும்போது அவர்களின் பட்டங்கள் செல்லாது என்று அறிவிக்கப்படும் வாய்ப்புள்ளது. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ராஜாராம் கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றார். ராஜாராம் ஓய்வு பெற்று ஆறு மாதங்கள் கழித்து தான் புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவை அரசு அமைத்தது. அதற்குப் பிறகு ஐந்து மாதங்கள் ஆகியும் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படாததுதான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணமாகும்.
சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக உள்ள நிலையில், உடனடியாக அந்த பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமித்த பின்பே பட்டமளிப்பு விழாக்களை நடத்த அரசு முன்வர வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
மாணவர்களுக்குப் பட்டமளிப்பு: ராமதாஸ் கேள்வி! மாணவர்களுக்குப் பட்டமளிப்பு: ராமதாஸ் கேள்வி! Reviewed by நமதூர் செய்திகள் on 21:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.