மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ. 14¼ லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் புது வாழ்வுத்திட்டம் இணைந்து நடத்திய உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 101 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 25 ஆயிரத்து 850 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தரேஸ் அஹமது வழங்கினார்
101 பயனாளிகளுக்கு...
மாற்றுத்திறனளிகள் நலத்துறை மற்றும் புதுவாழ்வுத் திட்டம் இணைந்து நடத்திய உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் 101 பயனாளி களுக்கு ரூ.14 லட்சத்து 25ஆயிரத்து 850 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை யும்,பகல் நேர பாதுகாப்பு மையங்களுக்கு ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நிதியினை யும் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மற்றும் புதுவாழ்வுத் திட்டம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது தலைமையில் மாவட்ட கலெக்டர்அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தரேஸ்அஹமது, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் நலத்துறையின் மூலம் மொத்தம் 84 பேருக்கு ரூ.12லட்சத்து 57 ஆயிரத்து 850 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சிறப்பு நிதி
மேலும். புதுவாழ்வு திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளி களுக்கு ஒன்றிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அந்த போட்டிகளில் வெற்றிப் பெற்ற 128 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் மாற்றுதிறனாளிகளுக் கான தனி நபர் கடன் மற்றும் சிறுப்புக்குழுக்கான நேரடி கடன் வழங்கும் திட்டங்களின் கீழ் 17 பேருக்கு ரூ.1லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 10 பகல் நேர பாதுகாப்பு மையங்களுக்கு புதுவாழ்வு திட்டத்தின் மூலம் ரூ. 5லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு நிதிக்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து சிறப்பு பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர்கள்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சித்தலைவர் சகுந்தலா கோவிந்தன், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் மருதராஜா (பெரம்பலூர்) வெண்ணிலா ராஜா (ஆலத்தூர்), ஜெயலட்சுமி கனகராஜ் (வேப்பந்தட்டை),மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மனோகர், புதுவாழ்வு திட்ட மேலாளர் சுதாதேவி உள்ளிட்ட அலுவலர்கள். உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ. 14¼ லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ. 14¼ லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார் Reviewed by நமதூர் செய்திகள் on 21:02:00 Rating: 5

No comments:

Powered by Blogger.