லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி கூட்டத்தில் தள்ளு–முள்ளு சாலை மறியல்
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் 15 உறுப்பினர்களும் தலைவராக சம்சூல்பஜ்ரியா என்பவரும் அவரது கணவர் முகமது தஸ்லிம் துணைத்தலைவராகவும் உள்ளனர். தற்போது துணைத்தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக வார்டு உறுப்பினர் களிடையே குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அவரை கண்டித்து பேரூராட்சி உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு நேற்று சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் அக்கூட்டத்திற்கு திருச்சி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மார்கிரேட்சுசீலா வந்திருந்தார். மாலை கூட்டம் தொடங்கிய உடன் கூட்ட விவாதத்தில் துணைத்தலைவரின் நடவடிக்கைகளை கண்டித்து உறுப்பினர்கள் பேசியதாக தெரிகிறது. அதில் வார்டு உறுப்பினர்களுக்கும் துணைத்தலைவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த வார்டு உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் திடீரென பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தராஜ் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தியதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பின்னர் கூட்டம் வருகின்ற 22–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி, தலைவர் மற்றும் 7–வது வார்டு உறுப்பினர் தவிர அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி கூட்டத்தில் தள்ளு–முள்ளு சாலை மறியல்
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:02:00
Rating:
No comments: