ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வுஎழுதியவருக்கு இன்று "மார்க்ஷீட்'

"கடந்த கல்வியாண்டில் ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயத் தேர்வு எழுதியவர்களுக்கு, இன்று மார்க்ஷீட் வழங்கப்படுகிறது' என, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் (பொறுப்பு) முத்துரெங்கன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கீழப்பழூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், கடந்த 2012- 2013ம் கல்வியாண்டில், ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, இன்று காலை, 10 மணியளவில், கீழப்பழூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மார்க்ஷீட் வழங்கப்படுகிறது.

அதே நாளில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழூர் அழகப்பா மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பனிமலர் மேல்நிலைப் பள்ளியிலும் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களும், கீழப்பழூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு சென்று, மார்க்ஷீட் பெற்றுக்கொள்ளலாம்.

இதற்காக தனித்தேர்வர்கள் தங்களது தேர்வு மைய ஹால்டிக்கெட் அல்லது பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் அடையாள அட்டை ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை கொண்டுவர வேண்டும்.பெரம்பலூர் மாவட்டத்தில், தனலட்சுமி சீனிவாசன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கிறிஸ்டியன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஸ்ரீசாரதா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அன்னமங்கலம் ஜெஸி ஆதாம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அரும்பாவூர் விவேகானந்தா ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,

 உடும்பியம் வித்யவிகாஸ் பிளஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் லெட்சுமி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கீழப்பழூர் விநாயகா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஜெயங்கொண்டம் மார்டன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், உடையார்பாளையம் சதாபாக்கியம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தத்தனூர் கே.கே ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகிய, 11 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, அந்தந்த பயிற்சி நிறுவனங்களிலேயே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மார்க்ஷீட் வழங்கப்பட உள்ளது.
ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வுஎழுதியவருக்கு இன்று "மார்க்ஷீட்' ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வுஎழுதியவருக்கு இன்று "மார்க்ஷீட்' Reviewed by நமதூர் செய்திகள் on 20:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.