டெல்லி நீர்வாரிய ஊழல் அதிகாரிகள் சஸ்பெண்ட்: அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி!

ஊழல்வாதிகள் தப்ப முடியாது என்று கூறிக்கொண்டிருந்த அர்விந்த் கெஜ்ரிவால் கடைசியில் செயலில் இறங்கினார். டெல்லி நீர் வினியோக வாரிய ஊழல் அதிகாரிகள் 3 பேரை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால். 

மேலும் 800 பேருக்கு பணி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களிடம் குடிநீர் வினியோகத்தை சீர் செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தலைமை குடிநீர் ஆய்வாளர் வினோத் குமார், பட்வாரி சுனில்குமார் மற்றும் மீட்டர் ரீடராக இருந்த அடுல் பிரகாஷ் ஆகியோர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கட்டிட கட்டுமானத்திற்கான நீர் பயன்படுத்துதல் தொடர்பாக லஞ்சம் கேட்டதாக தொலைக்காட்சி ஸ்டிங் ஆபரேஷன் ஒன்று தெளிவாக அம்பலப்படுத்தியதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

டெல்லி மாநில ஊழல் எதிர்ப்பு அமைப்பு இவர்களை விசாரணை செய்யவுள்ளது. ஆம் ஆத்மி கட்சி பதவியேற்றவுடனேயே டெல்லி நீர்வாரிய தலைமைச் செயல் அதிகாரி தேவஸ்ரீ முகர்ஜீ பணி மாற்றம் செய்யப்பட்டார். அவர் சென்ற 10 நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி நீர்வாரிய ஊழல் அதிகாரிகள் சஸ்பெண்ட்: அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி! டெல்லி நீர்வாரிய ஊழல் அதிகாரிகள் சஸ்பெண்ட்: அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி! Reviewed by நமதூர் செய்திகள் on 23:44:00 Rating: 5

No comments:

Powered by Blogger.