கலெக்டர் அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்

நாகர்
கோவில், ஜன. 6–
குமரி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேச்சிப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறுக்கு அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த தாய் ராஜேஸ்வரி–குழந்தை குடும்பத்தினருக்கு
நிதி உதவி வழங்க வேண்டும், குலசேகரம் அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் சீரான முறையில் இயங்க டாக்டர்கள், மற்றும் மருத்துவ பணியாளர்களை போதுமான அளவு நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
குலசேகரம் நகர தலைவர் அபுதாகீர் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட தலைவர் சுல்பிகர்அலி கண்டன உரையாற்றினார். துணை தலைவர் ஜாகீர்உசேன், மாவட்ட பொதுச்செயலாளர் காஜா முகைதீன், செயலாளர் பிர்தவுஸ், பொருளாளர் கலில்ரகுமான், பத்மநாபபுரம் தொகுதி தலைவர் செய்யது, கன்னியாகுமரி தொகுதி தலைவர் சாதிக், பாப்புலர் பிரண்டு ஆப் இந்தியா, நாகர்கோவில் நகர தலைவர் இப்ராகிம், எஸ்.பி.டி.யூ. மாவட்ட துணை தலைவர் சிக்கந்தர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
நகர பொறுப்பாளர் இஸ்காக் நன்றி கூறினார்.
கலெக்டர் அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம் Reviewed by நமதூர் செய்திகள் on 23:46:00 Rating: 5

No comments:

Powered by Blogger.