ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயரத்தை ரிப்போர்ட் செய்த பத்திரிகை மீது தாய்லாந்து அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!

பாங்காக்:மியான்மரில் இருந்து தப்பித்து தாய்லாந்து சென்ற ரோஹிங்கியா முஸ்லிம்கள் சந்திக்கும் துயரங்களைக் குறித்து செய்தி வெளியிட்டபத்திரிகை மீது அந்நாட்டு அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கலவரம் வழக்கமாகிவிட்ட மியான்மரில் இருந்து அபயம் தேடிவரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆட்கடத்தல் மற்றும் அடிமை வேலைகளுக்கு ஆளாவதாகவும், இதற்கு தாய்லாந்து அரசும், கடற்படையும் ஒத்துழைப்பதாக செய்தி வெளியானது. இச்செய்தியை வெளியிட்ட புகைத்வான் என்ற பத்திரிகை மீது கடற்படை கிரிமினல் நடவடிக்கை எடுத்துள்ளது.செய்தியை வெளியிட்டதன் பெயரால் சிறைக்குச் செல்லவும் தயார் என்று புகைத்வான் பத்திரிகையின் ஆசிரியர் அலன் மோரிசன் தெரிவித்துள்ளார். 
ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயரத்தை ரிப்போர்ட் செய்த பத்திரிகை மீது தாய்லாந்து அரசின் பழிவாங்கும் நடவடிக்கை! ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயரத்தை ரிப்போர்ட் செய்த பத்திரிகை மீது தாய்லாந்து அரசின் பழிவாங்கும் நடவடிக்கை! Reviewed by நமதூர் செய்திகள் on 01:38:00 Rating: 5

No comments:

Powered by Blogger.