எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் சென்னை, ஜன.4- ஊழல், முறைகேடுகளை தடுத்து நிறுத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள லோக்பாலுக்கு இணையான லோக் அயுக்தாவை தமிழகத்தில் அமைத்திட வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ரத்தினம் தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்ட தலைவர் முகமது நாஜிம் வரவேற்புரையாற்றினார். மாநிலத்தில் ஊழல்களை ஒழிப்பதற்கு மத்திய அரசு நிறைவேற்றியுள்ள லோக்பால் போன்று தமிழகத்திலும் லோக் அயுக்தா உடனடியாக அமைத்திட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில், பொது செயலாளர் முகமது இஸ்மாயில், வட சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம், தென்சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் நேதாஜி ஜமால் ஆகியோர் உள்பட ஏராளமானோர்கலந்துகொண்டனர்
எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் Reviewed by நமதூர் செய்திகள் on 05:48:00 Rating: 5

No comments:

Powered by Blogger.