முக பரு குறைய சில வழிகள்..!
அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது. முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்த வெண்டும்.
1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும்.
பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.
எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.
பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும் துளசி இலைகளை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும் பின்பு காலையில் துளசி இலைகள் ஊறிய நீரை முகத்தில் தடவி அரைமணிநேரம் காய விட்டு பின்பு கழுவினால் முகம் பளபளப்பாகவும் இருக்கும் .இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் முக பரு கொஞ்சம் கொஞ்சமாக குறையும் . நல்ல பலன் கிடைக்கும்
இன்னும் சில குறிப்புகள் :
1.சேற்றுக் கற்றாளை பூ – 1 துண்டு
செஞ் சந்தனம் பூ – 5 கிராம்
வெள்ளரிக்காய் பூ – 2 துண்டு
சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து காய்ந்த பிறகு இளம் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறி முகம் பளிச்சிடும்.
2.கரட் – 2 துண்டு
பாதாம் பருப்பு – 2
தயிர் – 1/2 கப்
இவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் பூசி காயவைத்து பின் இளஞ் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறுவதுடன் முகச் சுருக்கம் நீங்கும்.
ஒலிவ் எண்ணையுடன் சந்தனம் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்.
பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.
அவரை இலையைப் பறித்து நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்து அதனை கசக்கி முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்கள் நாளடைவில் மாறும்.
புதினா இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் பொலிவு பெறுவதுடன் முகப்பரு தழும்புகள் மாறும்.
முக பரு குறைய சில வழிகள்..!
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:24:00
Rating:
No comments: