முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஐ.எஸ்.ஐ தொடர்பு கொண்டதா?- மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு!
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தய்யிபா இயக்கத்தினர் தங்களது இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக, உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் கலவரம் நடந்த முஸஃபர் நகரில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளதாக வெளியான செய்தி அரசியல் கட்சிகள் இடையே பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது.
டெல்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு சிறப்பு ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் இதுக்குறித்து கூறியதாவது:முஸஃபர்நகரில் வசித்து வரும் ஜமீர், லியாகத் ஆகிய இரு இளைஞர்களை டெல்லி போலீஸார் அண்மையில் கைது செய்தனர். மஸ்ஜித் கட்டுவதற்கு பணம் சேர்ப்பதற்காக இந்த இருவரும் ஆள் கடத்தல், வழிப்பறி ஆகிய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முஸஃபர் நகர்வாசிகள் என்பதைத் தவிர அண்மையில் அப் பகுதியில் ஏற்பட்ட கலவரத்துக்கும் இவர்களுக்கும் இடையே எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால்,இவர்கள் இருவர் உள்ளிட்ட முஸஃபர் நகர்வாசிகள் சிலரிடம், இந்தியாவுக்கு எதிராக நாசவேலையில் ஈடுபட வேண்டும் என்று அடையாளம் தெரியாத நபர்கள் மூளைச் சலவை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, தங்களுக்கு ஒத்துழைப்பாக நடந்து கொண்டால் செல்வச் செழிப்புடன் கூடிய வசதிகள் செய்துதரப்படும் என்று ஆசை வார்த்தைகளை சில நபர்கள் கூறியுள்ளதாக ஜமீரும்,லியாகத்தும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தியபிறகு டெல்லி பாடியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது என்றார்.
முன்னதாக, சில நாள்களுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தில் முஹம்மது சாஹீத்,முஹம்மது ரஷீத் ஆகிய இருவரை லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் முஸஃபர் நகர் வாசிகளை சந்தித்து தங்கள் இயக்கத்தில் சேர ஆசைவார்த்தை கூறியதாக டெல்லி போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், தற்போது எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா அதனை மறுக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அண்மையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது, முஸஃபர்நகர் கலவரம் குறித்துப் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மதவாதத்தைத் தூண்ட முயல்வதாகவும், இதற்கு மாற்றாக முஸஃபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தொடர்பு கொண்டு சதித் திட்டங்களுக்குத் தூண்ட முயல்வதாகத் தனக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
முஸ்லிம் தலைவர்கள் ராகுலின் கருத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டிருந்தனர். இதுக்குறித்து உ.பி மாநில சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான ஆஸம் கான் கூறுகையில்,’ முஸஃபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஐ.எஸ்.ஐ. தொடர்பு கொண்டதாக ராகுல் காந்தி கூறியதை உண்மை என்று காட்டுவதற்காக டெல்லி போலீஸார் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது’ என்றார்.
இந்நிலையில் முஸஃபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை, பாகிஸ்தான்உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்பு கொள்ளவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “”உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் ஐ.எஸ்.ஐ. செயல்பாடு இருப்பது உண்மைதான் என்றாலும், முஸஃபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஐ.எஸ்.ஐ. அணுகியதாக எங்களுக்கு உளவுத் தகவல் எதுவும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளா
முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஐ.எஸ்.ஐ தொடர்பு கொண்டதா?- மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:27:00
Rating:
No comments: