பூரண மதுவிலக்கு கோரி மாணவர்களின் போராட்டங்கள்!

மதுரை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி மதுரையில் ஆங்காங்கே மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். இது மாணவர்களிடையே வெகுவேகமாக பரவி வருகிறது!
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள திருமால் புதுப்பட்டியை சேர்ந்தவர் விஜிக்குமார். மதுரை சட்டக்கல்லூரி 2 ஆம் ஆண்டு மாணவரான இவர் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி திருமங்கலத்திலும், மதுரையில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பும் உண்ணாவிரதம் இருந்த போது காவல்துறையினரால கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை சட்டக்கல்லூரி முன்பு நேற்று காலை விஜிக்குமார் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். இவருடன் படிக்கும் மாணவர்கள் வந்து விஜிக்குமாரின் உண்ணாவிரப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவி ஜோதிமணி ஆகியோர் அவ்வப்போது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் தொடங்கி வைத்த மதுவுக்கு எதிரான இப்போராட்ட அலை, தமிழகமெங்கும் மாணவர்களிடையேயும் பெண்களிடையேயும் பெருத்த வரவேற்பைப் பெற்று வருவதோடு பல்வேறு இடங்களில் மாணவர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்ந்தால், மதுவிலக்கு விசயத்தில் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் நீண்டகாலத்துக்குக் காலம் தள்ள முடியாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பூரண மதுவிலக்கு கோரி மாணவர்களின் போராட்டங்கள்! பூரண மதுவிலக்கு கோரி மாணவர்களின் போராட்டங்கள்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:11:00 Rating: 5

No comments:

Powered by Blogger.