ராணுவத்தின் குற்றங்களை விசாரிக்கவேண்டும்!-சர்வதேச நீதிமன்றத்தில்முர்ஸி அரசு வழக்கு!
கெய்ரோ: எகிப்திய சர்வாதிகார ராணுவத்தின் குற்றங்களை விசாரிக்க கோரி ராணுவ சதிப்புரட்சியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட எகிப்தின் முதல் ஜனநாயக அதிபர் முஹம்மது முர்ஸி தலைமையிலான அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
எகிப்தில் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸியை சதிப்புரட்சியின் மூலம் பதவி நீக்கம் செய்ததோடு அதனை எதிர்த்தவர்களை கொடூரமாக அடக்கி ஒடுக்கியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. ராணுவம் அக்கிரமங்கள் புரிந்ததை நவம்பர் மாதம் சட்ட வல்லுநர்கள் நடத்தியவிசாரணையில் நிரூபணமானது.
ராணுவத்தின் அக்கிரமங்கள் தொடர்பாக விரிவானபுகாருடன் ஆதாரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.கொலை, சட்டவிரோதமாக சிறையில் அடைத்தல், கடத்திச் செல்வது, சித்திரவதை உள்ளிட்ட குற்றங்களை ராணுவம் புரிந்ததற்கு ஆதாரம் இருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
ராணுவத்தின் குற்றங்களை விசாரிக்கவேண்டும்!-சர்வதேச நீதிமன்றத்தில்முர்ஸி அரசு வழக்கு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
19:55:00
Rating:
No comments: