துருக்கி:நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் டிஸ்மிஸ்!

அங்காரா : அரசு ஆதரவாளர்களுக்கு எதிராக நடந்த சர்ச்சைக்குரிய ஊழல் விசாரணையில் தொடர்புடைய  350 போலீஸ் அதிகாரிகளை துருக்கி அரசு நீக்கம் செய்தது.நூற்றுக்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏராளமானோர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை தோகன் செய்தி ஏஜன்சி வெளியிட்டுள்ளது. நேற்று முன் தினம் அரசு வெளியிட்ட புதிய சட்டத்தின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாதார குற்றங்கள், கள்ளக்கடத்தலை தடுப்பது, அமைப்பு ரீதியான குற்றம்ஆகிய புலனாய்வு துறைகளின் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி ஆளும் கட்சியான ஏ.கே.கட்சியுடன் நெருங்கிய உறவை பேணும் 50க்கும் அதிகமான நபர்கள் ஊழல் விசாரணை தொடர்பாக போலீசாரால் கைதுச் செய்யப்பட்டனர்.இவர்களில் சிலர் தற்போது சிறையில்உள்ளனர்.
அமைச்சர்களின் மகன்கள் உள்ளிட்டோர் கைதுச் செய்யப்பட்ட துதுருக்கி அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. சூஃபி அறிஞர் ஃபத்ஹுல்லாகுலானின் இஸ்மத் இயக்கம் தான் ஊழல் குறித்த விசாரணையின் பின்னணியில் இருப்பதாக அரசு குற்றம் சாட்டியது.
துருக்கியில் செல்வாக்கு பெற்ற இஸ்மத் இயக்கத்தின் கல்வி நிலையங்களை அரசு மூடியது.இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஊழல் குறித்த விசாரணை என்று செய்திகள் வெளியாகின.துருக்கியில் போலீஸ் மற்றும் நீதித்துறையில் செல்வாக்குப் பெற்ற இஸ்மத் இயக்கம் முன்னர் ஏ.கே.கட்சியுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந்தது.
அரசு மற்றும் ஏ.கே.கட்சியை தகர்ப்பதற்கான சதித்திட்டமே பிரபல நபர்களை போலீஸ் ஊழல் குற்றச்சாட்டின் பெயரால் கைதுச் செய்தது என்று பிரதமர் ரஜப்தய்யிப் எர்துகான் குற்றம் சாட்டியிருந்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று துருக்கியிடம் ஐரோப்பிய யூனியன் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே ஊழல் குறித்து விசாரணை நடத்தும் உயர் அதிகாரிகளின் பணிகளை பரிசோதிக்கவேண்டும் என்று துருக்கியின் உயர்மட்ட சட்டக்குழு அறிவித்துள்ளது.
துருக்கி:நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் டிஸ்மிஸ்! துருக்கி:நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் டிஸ்மிஸ்! Reviewed by நமதூர் செய்திகள் on 19:56:00 Rating: 5

No comments:

Powered by Blogger.