பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தியில் கூடுதல் மகசூல் பெறுவது எப்படி? அதிகாரி விளக்கம்
மறுதாம்பு பருத்தியில் ஊட்டச்சத்து மற்றும் பூச்சி நிர்வாகம் முறை யின் மூலம் பருத்தி யில் தோன்றும் புதிய துளிர்களையும் பூக்களை யும் பாதுகாத்து, மகசூல் இழப்பை தவிர்த்து அதிக லாபம் பெறலாம் என்று வேளாண்மை இணை இயக்குநர் அழகிரிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மானாவாரி பயிர்
பெரம்பலூர் மாவட்டத்தில் 31,116 ஹெக்டர் மானாவாரிப் பயிராக ஆடி மாதத்தில் விதைப்பு செய்யப்பட்ட வீரிய ஒட்டு ரக பருத்தி பயிர்கள் சரியான தருணத்தில் பருவ மழை பெய்யாததாலும், அதிக வெப்ப நிலையாலும் சாறு உறிஞ்சும் பூச்சியின் தாக்கு தலுக்கு உள்ளானது. பின்னர் நீண்ட வறட்சி நிலைக்குப் பின்னர் மழைப் பொழிவினால் ஆல்டர்நேரியா இலைப்புள்ளி நோயின் தாக்குதலுக்கும், ஊட்டச் சத்துக்களின் குறை பாட்டிற்கும் உள்ளாகி பாதிப்பு ஏற்பட்டது.
தற்சமயம் சரியான பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்ட பருத்தி வயல் களில் புதிய இலைகள் உருவாகி சப்பைகள், பூக்களும் தோன்றியுள்ளன.
செடி முழுவதும்
இத்தகைய சூழ்நிலையில் மறுதாம்பு பயிரினில் அதிக மகசூல் பெறுவதற்கு நீர்ப் பாசன வசதியுள்ள, மண்ணின் ஈரத் தன்மை சரியாக உள்ள நிலையில் இலை வழியாக நீரில் கரையும் 19:19:19 எனும் உரத்தினை லிட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் கரைத்து செடி முழுவதும் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
பின்னர் 15 நாட்கள் இடை வெளியில் மீண்டும் இலை வழியாக நீரில் கரையும் பொட்டாசியம் குளோரைடு அல்லது மல்டி கே எனப்படும் பொட்டாசியம் நைட்ரேட் (13:0:45) உரத்தினை லிட்ட ருக்கு 10 கிராம் என்ற அளவில் கரைத்து தெளிக்க வேண் டும்.
பருத்தி பயிரினைத் தாக்க வல்ல சாறு உறிஞ்சும் பூச்சி களை குறிப்பாக தத்துப் பூச்சியினை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு டயபென்தயூரான் 50 ஷ்ஜீ 600 கிராம் அல்லது தயோமீத்தாக்சம் 20 ஷ்ரீ 100 கிராம் அல்லது இமிடா குளோபிரிட் 20 sநீ100 மில்லி லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
மாவுபூச்சி தாக்குதல்
இதேபோல் மாவுப் பூச்சியின் தாக்குதல் இருந்தால் புரோப்பினோபாஸ் 50 ணிநீ 1500 மில்லி லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். அத்துடன் இலைப்புள்ளி நோய் காணப்பட்டால் ஹெக்சாகோனசோல் என்ற பூசணக் கொல்லியை எக்டருக்கு 500 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும். பூச்சி மற்றும் பூசணக் கொல்லி களைத் தெளிக்கும் போது ஒட்டு திரவம் லிட்டருக்கு ஒரு மில்லி என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் தற் பொழுது பருத்தியில் தோன்றும் புதிய துளிர்களை யும் பூக்களையும் பாதுகாத்து, மகசூல் இழப்பை தவிர்த்து இலாபம் பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தியில் கூடுதல் மகசூல் பெறுவது எப்படி? அதிகாரி விளக்கம்
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:08:00
Rating:
No comments: