9 வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ. 57 லட்சம் நிதி உதவி பெரம்பலூர் கலெக்டர் வழங்கினார்
புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 9 கிராம வறுமை ஒழிப்பு சங்களுக்கு இரண்டாம் தவணை நிதியாக ரூ.57 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான வங்கி காசோலைகளை கலெக்டர் தரேஸ் அஹமது வழங்கி னார்.
337 மனுக்கள்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தரேஸ் அஹமது, தலைமையில்¢¢ நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியும், பல்வேறு நலத்திட்டங்கள் வேண்டியும் 337 மனுக்கள் பெறப் பட் டன.
புதுவாழ்வு திட்டத்தின் மூலம் கிராம மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் அமைக்கப் பட்டு அதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற் றோருக்கு தனி நபர் கடன், இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஆதார நிதி மற்றும் சுய தொழில் தொடங்க பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங் கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் தவணை நிதி
இத்திட்டங்களின் கீழ் ஜெமீன்பேரையூர், மேல மாத்தூர், ஆதனூர், ஒதியம், பென்னகோணம், வசிஷ்ட புரம், தொண்டபாடி, மேட்டு பாளையம் மற்றும் தேவையூர் ஆகிய ஒன்பது ஊராட்சி மன்றங்களில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக் கான இரண்டாம் தவணை நிதியாக ரூ.57 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான வங்கி காசோலைகளை கலெக்டர் தரேஸ் அஹமது ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் சங்க பிரதிநிதிகளிடம் வழங்கி னார்.
மேலும் தொழில் பயிற்சி யுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ஜே.சி.பி பயிற்சி முடித்த 20 இளைஞர்களுக்கு சான்றிதழ் களையும், 50 இளைஞர்களுக்கு பொது வில்லைகளையும் கலெக்டர் வழங்கினார்.
வேண்டுகோள்
மீதமுள்ள வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தவணை நிதி தொடர்ந்து வழங்கப் படும் என்றும், பெறப் படும் நிதியினை முறையாக பயன்படுத்தி அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிர மணியன், கலெக்டரின் நேர் முக உதவியாளர் (பொது) மலையாளம், புதுவாழ்வு திட்ட மேலாளர்சுதாதேவி, மற்றும் அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
9 வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ. 57 லட்சம் நிதி உதவி பெரம்பலூர் கலெக்டர் வழங்கினார்
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:09:00
Rating:
No comments: