தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
பெரம்பலூர் பகுதியில் தொடர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையனை, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அஹமது புதன்கிழமை உத்தரவிட்டார்.
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமம், புதுமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் புகழேந்தி (25). இவர், பெரம்பலூர் மற்றும் பாடாலூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் வழிப்பறிக் கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் வழிப்பறிக் கொள்ளை வழக்கு ஒன்றில் பாடாலூர் போலீர், புகழேந்தியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, புகழேந்தியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய பாடாலூர் காவல் ஆய்வாளர் ரெத்தினசாமி அறிக்கை தாக்கல் செய்தார்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் தரேஷ் அஹமது, புகழேந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க புதன்கிழமை உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை, பாடாலூர் போலீர் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் புதன்கிழமை அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் தரேஷ் அஹமது, புகழேந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க புதன்கிழமை உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை, பாடாலூர் போலீர் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் புதன்கிழமை அளித்தனர்.
தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:17:00
Rating:
No comments: