அலுவலகம் தாக்குதல் பின்னணியில் சங்கபரிவார இயக்கங்கள்:பிரஷாந்த் பூஷன் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி தலைமையகத்தின் மீது தாக்குதல் சங்பரிவார் பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதல் தொடுத்துள்ளனர். ஹிந்து ரக்ஷா தள் என்ற அந்த அமைப்பினர் 60க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அங்குள்ள ஊழியர்களை தாக்கியும் , பெண்களை அவமானப்படுத்தியும்,
சொத்துக்களுக்கு கடும் சேதமும் விளைவித்துள்ளனர். தலைமை அலுவலகத்திற்கு அருகில் உள்ள முதல்வர் கெஜ்ரிவால் தங்குமிடத்திற்குள்ளும் விஷமிகள் நுழைய முயன்றுள்ளனர்.
இவ்வளவு நடந்த பிறகும் கூட தங்களுக்கும் தங்கள் தலைமை அலுவலகத்திற்கும் சிறப்பு பாதுகாப்பு என்று எதுவும் தேவையில்லை என கேஜ்ரிவால் மறுத்துள்ளார். பாதுகாப்பை பலப்படுத்தவதால் மட்டும் பிரச்னை தீர்ந்து விடப்போவதில்லை என்கிறார்.
2011 ஆம் ஆண்டு தன்னை அலுவலகத்தில் வைத்து தாக்கியவர்கள் தான் இவர்கள் என்று மூத்த தலைவர் பிரஷாந்த் பூஷன் கூறுகிறார். இந்த தாக்குதல் பின்னணியில் பாஜக இருக்கிறது என அடித்து கூறுகிறார் பிரஷாந்த் பூஷன்.
ஜம்மு காஷ்மீரில் மக்களை வதைக்கும்ரானுவ சட்டங்கள் தொடரவேண்டுமா வேண்டாமா என்பது குறித்து அந்த மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என பிரஷாந்த் பூஷன் கருத்து தெரிவித்து இருந்தார். அதற்காக எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதலை அவர்கள் நடத்தியுள்ளதாக அறிவித்தாலும் பாதுகாப்பு இல்லா நிலையை பயன்படுத்தி மோடியை பின்னுக்கு தள்ளி புலம்பி பாயை பிராண்ட வைத்துவிட்ட கெஜ்ரிவாலை காலி செய்துவிடவேண்டும் என்ற வெறியே இவர்களது கொடூர தாக்குதல் மூலம் வெளிப்பட்டுள்ளது. தோல்வி பயம் ஆட்டிப்படைக்கிறது மோடி முகாமில் என்கிறார்கள் கேஜ்ரிவால் ஆதரவாளர்கள்.
அலுவலகம் தாக்குதல் பின்னணியில் சங்கபரிவார இயக்கங்கள்:பிரஷாந்த் பூஷன் குற்றச்சாட்டு அலுவலகம் தாக்குதல் பின்னணியில் சங்கபரிவார இயக்கங்கள்:பிரஷாந்த் பூஷன் குற்றச்சாட்டு Reviewed by நமதூர் செய்திகள் on 20:00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.