பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் காலாவதியான தின்பண்டங்கள் அழிப்பு

பெரம்பலூர் பஸ் நிலைய கடைகளில் வைக்கப்பட்டிருந்த காலா வதியான தின்பண்டங்கள் அழிக்கப்பட்டன.
புகார்:
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் உணவுகள் விற்பதாகவும் காலாவதியான பொருள்கள் விற்பதாகவும் மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதன் பேரில் கலெக்டரின் உத்தரவின்படி உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ந.சின்னமுத்து, ந.ரவி, மற்றும் த.அழகுவேல் ஆகியோர் கொண்ட குழு பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
காலாவதியான தின்பண்டம்
பெரும்பாலான கடைகளில் அனைத்து தின்பண்டங்களும் கண்ணாடி கூண்டு வைத்து விற்பனை செய்யப்பட்டிருந்தது. கண்ணாடி கூண்டு வைக்காத சில கடைகளின் உரிமையாளர்களுக்கு உணவுப் பொருட்களை பாதுகாப்பாகவும், 1 மாத காலத்திற்குள் கண்ணாடி கூண்டு வைத்து பராமரிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் அனைத்து கடைகளிலும் டீத்தூள், மற்றும் பால், குளிர் பானங்கள், நொறுக்குத்தீனிகள், பிஸ்கட், பொட்டலமிடப்பட்ட பொருட்கள், இவை அனைத்திலும் காலாவதியான தேதி ஆய்வு செய்யப்பட்டு ரூ.2000 மதிப்பிலான காலா வதியான மற்றும் தரமற்ற பொருட்கள் அழிக்கப்பட்டது.
விழிப்புணர்வு கூட்டம்
பின்னர் அனைத்து கடை வியாபாரிகளையும் அழைத்து உணவுப்பொருட்களை பாதுகாப்பாக பராமரிப்பது குறித்தும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைக்க கூடாது என்பது குறித்தும் அறிவுறுத்தும் வகையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. கடைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி 4–ம் தேதிக்குள் உணவு பாதுகாப்புத்துறை மூலம் உரிமம் மற்றும் பதிவு பெற அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் புதிய பஸ் நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் செல்லப்பிள்ளை, மற்றும் அனைத்து கடை வியாபாரிகளும் பங்கேற்றனர்.
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் காலாவதியான தின்பண்டங்கள் அழிப்பு பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் காலாவதியான தின்பண்டங்கள் அழிப்பு Reviewed by நமதூர் செய்திகள் on 20:16:00 Rating: 5

No comments:

Powered by Blogger.