பெரம்பலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு பொருட்கள் மாவட்ட வருவாய் அதிகாரி தகவல்

பெரம்பலூர் மாவட்டத் தில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 818 பேருக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. என்று மாவட்ட வருவாய் அதிகாரி கூறினார்.

பொங்கல் பரிசு பொருட்கள்
தமிழக முதலமைச்சரின் உத்தரவின்பேரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் கட்டுப்பாட்டிலுள்ள நியாய விலைக்கடைகளில் நடை பெற்றது. பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி பேசியதாவது:–
பெரம்பலூர் வட்டம்
பெரம்பலூர் வட்டத்தில் 42 ஆயிரத்து 535 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும், 272 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக் கும், 70 முகாம்வாழ் இலங்கை தமிழர் அட்டைதாரர்களுக்கும் 42 ஆயிரத்து 877 கிலோ கிராம் பச்சரிசியும், 42 ஆயிரத்து 877 கிலோ கிராம் சர்க்கரையும், வேப்பந்தட்டை வட்டத்தில் 43 ஆயிரத்து 364 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும், 36 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 43 ஆயிரத்து 400 கிலோ கிராம் பச்சரிசியும், 43 ஆயிரத்து 400 கிலோ கிராம் சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, குன்னம் வட்டத்தில் 44 ஆயிரத்து 333 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும், 16 காவலர் குடும்ப அட்டைதாரர் களுக்கும், 44 ஆயிரத்து 349 கிலோ கிராம் பச்சரிசியும், 44 ஆயிரத்து 349 கிலோ கிராம் சர்க்கரையும், ஆலத்தூர் வட்டத்தில் 30 ஆயிரத்து 172 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும், 20 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 30 ஆயிரத்து 192 கிலோ கிராம் பச்சரிசியும், 30 ஆயிரத்து 192 கிலோ கிராம் சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 லட்சத்து 60 ஆயிரம் பேர்
ஆகமொத்தம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 818 கிலோ அரிசி மற்றும் 1 லட்சத்து 60 ஆயிரத்து 818 கிலோ சர்க்கரை மற்றும் இதரப் பொருட்களுடன் தலா ரூபாய் 100 வீதம் ரூ.1கோடியே 60லட்சத்து 81ஆயிரத்து 800 மதிப்புடன் கூடிய பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 56 ஆயிரத்து 987 நபர்களுக்கு விலையில்லா வேட்டிகளும், 1 லட்சத்து 59 ஆயிரத்து 2 நபர்களுக்கு சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழச்சியில் மாநில வேளாண் விற்பனை வாரிய தலைவர் ரவிச்சந்திரன், பெரம்பலூர்.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ, நகர் மன்றத்தலைவர் ரமேஷ், நகர்மன்ற துணைதலைவர் ஆர்.டி. ராமச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் உமாமகேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் ஆர்.பி.மருதராஜா (பெரம்பலூர்), வெண்ணிலா ராஜா (ஆலத்தூர்), ஜெய லட்சுமி கனகராஜ் (வேப்பந்தட்டை), மாவட்ட ஊராட்சி துணை தலைவர் என்.சேகர், குரும்பலூர் பேரூராட்சி தலைவர் என்.பாப்பம்மாள், மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.ராஜேந்திரன், மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு பொருட்கள் மாவட்ட வருவாய் அதிகாரி தகவல் பெரம்பலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு பொருட்கள் மாவட்ட வருவாய் அதிகாரி தகவல் Reviewed by நமதூர் செய்திகள் on 20:16:00 Rating: 5

No comments:

Powered by Blogger.