தமிழகத்தில் அடுத்த மாதம் 15ம் தேதி முதல் மின்கட்டண உயர்வு அமல்?


தமிழகத்தில் அடுத்த மாதம் 15ம் தேதி முதல் மின்கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மின் பயன்பாட்டுக்கான புதிய உத்தேச மின்கட்டன விவரங்கள் கடந்த 23ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்மூலம் மின்வாரியம் ரூ.6,805 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில், 15 சதவீத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மன்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் நேரிலோ அல்லது தபால் மூலம் 23ம் தேதிக்குள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று ஆணயைம் தெரிவித்துள்ளது. சென்னை, மதுரை, கோயமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், கூட்டங்களை நடத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்பு ஊடகங்களில் அறிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா சிறையில் உள்ளதால் தமிழகத்தில் நிலவி வரும், அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஓரிரு இடங்களில் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்திய பின், புதிய மின்கட்டணத்தை அரசுக்கு மன்சார ஒருங்குமுறை ஆணையம் பரிந்துரைக்க உள்ளது. எனினும் இதில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாத நிலையில், நவம்பர் 15ம் தேதி முதல் புதிய மின்கட்டண விகிதத்தை மின்சார ஆணையம் அமல்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த மாதம் 15ம் தேதி முதல் மின்கட்டண உயர்வு அமல்? தமிழகத்தில் அடுத்த மாதம் 15ம் தேதி முதல் மின்கட்டண உயர்வு அமல்? Reviewed by நமதூர் செய்திகள் on 22:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.