அங்கன்வாடி பணியாளர் உதவியாளர் காலிப்பணியிடம் : விண்ணப்பம் வரவேற்பு
பெரம்பலூர்: அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கலெக்டர் தரேஸ்அகமது தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 55 அங்கன்வாடிமையப் பணியாளர்கள், 2 குறுஅங்கன்வாடி மையப்பணியாளர்கள் மற்றும் 77 அங்கன்வாடிமைய உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறுஅங்கன்வாடி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பொது பிரிவினருக்கு 25முதல் 35வயதிற்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 25 முதல் 38வயதுக்குள்ளும், விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 25முதல் 40வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளருக்கான ஊதிய விகிதம் ரூ2500 முதல் ரூ5000 மற்றும் ரூ500 தர ஊதியமாக வழங்கப்படும். குறு அங்கன்வாடி பணியாளருக்கான ஊதியவிகிதம் ரூ1800முதல் ரூ.3300மற்றும் ரூ.400 தரஊதியம் ஆகும். அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பொதுப்பிரிவி னருக்கு 20முதல் 40வயதிற்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 20 முதல் 43 வயதுக்குள்ளும், விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 முதல் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர் பணியாளருக்கான ஊதிய விகிதம் ரூ.1300 முதல் ரூ.3000 மற்றும் ரூ300 தர ஊதி யமாகும். காலிப்பணியிடங்களின் விபரம் மற்றும் அவற்றிற்கான இனச்சுழற்சி விவரம் ஆகியவை அந்தந்தவட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரக விளம்பரப் பலகைகளில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவங்கள் அனைத்து வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கிடைக்கும்.பூர்த்திசெய்த விண்ணப்பங்களை சான்றொப்பமிட்ட ஆவ ணங்களுடன் தொடர்புடைய வட்டார குழந்தைவளர்ச்சித்திட்ட அலுவலகங்கள், தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அல்லது கலெக்டர்அலுவலகத்தில் வரும் 10ம்தேதி முதல் 25ம்தேதி மாலை 5.45மணிக்குள் ஒப்படைத்து அதற்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அங்கன்வாடி பணியாளர் உதவியாளர் காலிப்பணியிடம் : விண்ணப்பம் வரவேற்பு
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:03:00
Rating:
No comments: