வ.களத்தூர் ரேசன் கடையில் காலாவதியான பொருட்கள்-தமுமுக முற்றுகை

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் ரேசன் கடையில் நேற்று முன்தினம்  (20-10-2014) அன்று துவரம் பருப்பு விநியோகம் செய்யப்பட்டது. அப்போது கூடவே தனியாக (ரேசன் சேல்ஸ்மேன் வியாபாரம்) ரவா பாக்கெட், மைதா பாக்கெட் மற்றும் குளியல் சோப்பு ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் விற்பனை செய்துள்ளார்.. அந்த பொருட்களில் ரவா,மைதா காலாவதியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது மேலும் குளியல் சோப்பில் தேதியே அச்சிடாமல் இருந்தது.. இதனிடையே இந்த தகவல் தமுமுக நிர்வாகிகளுக்கு நேற்று இரவு பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று காலை 10 மணிக்கு ரேசன் கடைக்கு முன் திரண்ட தமுமுக நிர்வாகிகள் விற்பனையாளரிடம் முறையிட்டனர்..
பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கொடுத்த பொருட்களை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும், அதனுடைய விற்ற விலை ரூபாய் 22 என்பதற்கு பதிலாக ரூபாய் 30 தருவதாகவும், இனிமேல் இதுமாதிரி தவறு நடைபெறாது என்ற உத்தரவாத்த்தினை தமுமுக நிவாகிகளிடம் அளித்தார்..
இதனையடுத்து காவல்துறை கான்ஸ்டபிள் முன்னிலையில் அனைத்து பொருட்களும் வாபஸ் வாங்கப்பெற்று பணம் திருப்பி கொடுக்கப்பட்ட்து.. அந்த பொருட்கள் அனைத்தும் மாவட்ட உணவு மற்றும் பாதுகாப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.பொருட்கள் அனைத்தும் திருப்பி வாங்கும் வரை தமுமுக கிளைத்தலைவர் மு.ஜமீல் பாஷா, செயற்குழு உறுப்பினர்கள் மு.சபியுல்லாஹ், மு.முஹம்மது ரஃபீக், ஒன்றியப் பொருளாளர் அ.சாதிக் பாஷா, செயலாளர்கள் அ.ஜமீர் பாஷா,மு.கலிலூர் ரஹ்மான், பொருளாளர் அ.சிராஜ்தீன், மாணவர் இந்தியா ப.சாகுல் ஹமீது உள்ளிட்ட தமுமுக நிர்வாகிகள் மக்கள் அனைவருக்கும் பணம் கிடைக்கும் வரை அங்கேயே கண்காணித்து வந்தனர். இதனால் ரேசன் கடை முன்பு 3 மணிநேரம் பரபரப்பு காணப்பட்டது.
தகவல்
கலீல் ரஹ்மான்- செயலாளர் 
வி.களத்தூர், தமுமுக 
http://kallaru.com/?p=19692




வ.களத்தூர் ரேசன் கடையில் காலாவதியான பொருட்கள்-தமுமுக முற்றுகை வ.களத்தூர் ரேசன் கடையில் காலாவதியான பொருட்கள்-தமுமுக முற்றுகை Reviewed by நமதூர் செய்திகள் on 23:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.