வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஷ்மீரில் வேகமாக நடைபெறும் நிவாரண பணிகள்!





புதுடெல்லி/ஸ்ரீநகர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஷ்மீர் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிவாரண பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.கஷ்மீரில் வரும் தினங்களில் குளிர் வாட்டி எடுக்கும்.அதனை எதிர்கொள்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.300 வீடுகளை கட்டுவதற்கு
திட்டமிட்டுள்ளதாக நிவாரண பணிகளுக்கு தலைமை வகிக்கும் அப்துஸ்ஸமத் வளாஞ்சேரி தெரிவித்தார் .
முதல் கட்டமாக 185 வீடுகளை கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதில் 30 வீடுகளின் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன.
2 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள்
விநியோகிக்கப்பட்டுள்ளன.மேலும் 600 குடும்பங்களுக்கான உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும்.1800 குடும்பங்களுக்கு கம்பளிப்போர்வை வழங்கும் பணி வரும் தினங்களில் துவங்கும் என்று நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள சுஹைப்
தெரிவித்தார்.
ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் ஆரோக்கிய முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அமெரிக்காவில் இருந்து வந்துள்ள பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் ஜமீல் அக்தரின் சேவையும் முகாமில் கிடைக்கிறது.ஸ்ரீநகர், புல்வாமா, அனந்த்நாக், குல்காம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஜமீல் அக்தர் சேவை ஆற்றினார்.தினமும் நோயால் பாதிக்கப்பட்ட 200 பேர் முகாம்களுக்கு வருகை தருகின்றனர்.தண்ணீர் கெட்டிக் கிடப்பதால் நோய் பரவும் வாய்ப்புள்ளதால் முகாம்களில் சேவை புரிவோர் தடுப்பு நடவடிக்கைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
வெள்ளப்பிரளயத்தால் கஷ்மீர் பாதிக்கப்பட்ட அடுத்த நாட்களில் இருந்தே பாப்புலர் ஃப்ரண்டின் நிவாரணப் பணிகள் அங்கு நடந்துவருகின்றன.பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த செயல்வீரர்கள் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் சேவைக் களத்தில் உள்ளனர்.நேற்று முன் தினம் கஷ்மீர் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் அப்துல் மஜீத் வாணி, பாப்புலர் ஃப்ரண்டின் மறு சீரமைப்பு பணிகள் நடக்கும் பகுதிகளை பார்வையிட்டார்.’பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சேவைகள் முன்மாதிரியானவை’ என்று அவர் பாராட்டினார்.
- See more at: http://www.thoothuonline.com/archives/69574#sthash.2JqNhHES.dpuf
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஷ்மீரில் வேகமாக நடைபெறும் நிவாரண பணிகள்! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஷ்மீரில் வேகமாக நடைபெறும் நிவாரண பணிகள்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:24:00 Rating: 5

No comments:

Powered by Blogger.