வி.களத்தூரில் இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றது

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அக்டோபர் 13,14, 2014 ஆகிய இரண்டு நாட்கள் 
அறிவகம் தஃவா குழு இஸ்லாத்தை பற்றி தெரியாத மக்களுக்கு 
இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள்.

TNDFT அறிவகம் தஃவா குழு கடந்த 20 வருடமாக தமிழகத்தில் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தினை அறிமுகம் செய்து வருகிறார்கள். 
கிராமங்கள் தோறும் தவாடூர், சுற்றுலா தளங்களில் மக்களை சந்திப்பது, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அழைப்பு பணி செய்வது, பெருநாள் சந்திப்பு மூலமாக மக்களை சந்திப்பது என்று செயல்பட்டு வருகிறார்கள். 
அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்களும், திருக்குரானும் வழங்கி வருகிறார்கள். அவர்கள் கேட்கும் இஸ்லாம், இஸ்லாமியர்கள், சம்பந்தமான பல கேள்விகளுக்கு விடையளித்து இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்களை களைய முயற்சித்து வருகிறார்கள்.
இஸ்லாத்தினை விரும்பி ஏற்றுக்கொள்ளும் மக்களுக்கு அறிவகம் மதரசா வில் மூன்று மாத காலம் இஸ்லாத்தினை பயிற்றுவிக்கிறார்கள். அவர்களுக்கு சுன்னத் செய்வது, அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்வது, போன்ற பணிகளை செய்வது 

தற்போது பல்வேறு மாவட்டங்களிலும் இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றுவருகிறது. 

அதன் ஒருபகுதியாக வி.களத்தூர், வள்ளியூர், ராயப்ப நகர், பேரையூர், சமத்துவபுரம், அகரம், திருவாலந்துறை போன்ற கிராமங்களில் இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றது.
இதில் சுமார் 250 நபர்களை  சந்தித்து இஸ்லாத்தினை அறிமுகம் செய்தார்கள். 












வி.களத்தூரில் இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றது வி.களத்தூரில் இஸ்லாமிய அழைப்பு பணி நடைபெற்றது Reviewed by நமதூர் செய்திகள் on 22:11:00 Rating: 5

No comments:

Powered by Blogger.