அரஃபாவில் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கான சேவையில் (IFF) தன்னார்வலர்கள்!
மக்கா: முஸ்லிம்களின் புனித கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற உலகெங்கிலுமிருந்து 25 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் புனித மக்காவிற்கு வருகை புரிந்துள்ளார்கள்.
ஹஜ்ஜின் முக்கிய நாட்களில் ஒன்று அரபா தினம். இந்நாளில் அனைத்தும் முஸ்லிம்களும் இன நிற மொழி உடை பேதமின்றி வெள்ளாடை அணிந்தவர்களாக ஒரே இடத்தில் ஒன்று கூடி ”லப்பைக் அல்லாஹீம்ம லப்பைக்” என்று தல்பியா கூறியவர்களாக ஏக இறைவனை போற்றுவதாகும்.
இன்று (3.10.2014) அரபா தினத்தில். 25 இலட்சத்திற்கும் அதிகமான ஒன்று கூடலாயினர். நேற்று இரவு முதலே அவர்கள் அங்கு செல்லத் தொடங்கிவிட்டன்ர். இன்று அந்தி சாயும் வரை தங்கியிருந்து இறைவனை போற்றுவதோடு பிராத்தனைகளிலும் ஈடுபட்டனர்.
அரஃபாவில் உள்ள நமீரா பள்ளியில் (மஸ்ஜித் நமீரா) அரபா தினத்தின் குத்பா உரை நடத்தப்பட்டது. இந்த உரையை சவுதி பேரறிஞர் அப்துர் ரஹ்மான் ஆலு சேக் அவர்கள் நடத்தினார்கள்.
அரஃபாவில் உள்ள நமீரா பள்ளியில் (மஸ்ஜித் நமீரா) அரபா தினத்தின் குத்பா உரை நடத்தப்பட்டது. இந்த உரையை சவுதி பேரறிஞர் அப்துர் ரஹ்மான் ஆலு சேக் அவர்கள் நடத்தினார்கள்.
அரபாவில் இந்திய மக்களுக்கு சேவைகள் புரிவதற்காக இந்தியா பிரடர்னிடி போரத்தின்(IFF) நூற்றுக்கும் அதிகமான தன்னார்வ தொண்டர்கள் முஜீப் தலைமையில் ஒன்று கூடினர். இந்திய ஹாஜிகளை இரயில் நிலையங்களிலிருந்து அரபாவின் கூடராங்களில் கொண்டு சேர்ப்பது. வழி தவறியவர்களை அவர்களுக்குரிய கூடாரங்களுக்கு கொண்டு சேர்ப்பது. முதியோர்களை சக்கர நாற்காலி மூலம் உதவுவது என தங்களது சேவைகளை திறம்பட செய்தனர்.
மேலும் ஹாஜிகள் இன்று இரவு அரபாவிலிருந்து முஸ்தலிபாவிற்கு சென்று இரவில் தங்கி நாளை காலை மினாவிற்கு திரும்புவார்கள். இந்நிலைகளில் இந்தியா பிரடர்னிடி போரத்தின் (IFF) தன்னார்வ தொண்டர்கள் ஹாஜிகளுக்கு உதவுவதற்கு முஸ்தலிபா மற்றும் மினாவில் தயார் நிலையில் உள்ளார்கள்.
- அரபாவிலிருந்து அபூமுஸஅப், படங்கள் வசீம்
அரஃபாவில் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கான சேவையில் (IFF) தன்னார்வலர்கள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:32:00
Rating:
No comments: