காவல்நிலைய மரணங்களுக்கு எதிராக எழுவோம்!
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டணதில் காவல்நிலையத்திற்கு விசாரனைக்காக அழைத்து செல்லப்பட்ட முஹம்மது என்பவரை எஸ்.ஐ. காளிதாஸ் தனது துப்பாக்கியால் அந்த இளைஞரின் மார்பை குறிபார்த்து சுட்டுக் கொண்றுள்ளார். அதனால் தன்னை காப்பற்றிக்கொள்ள அவன் என்னை கத்தியால் குத்தினான் அதனால் பதிலுக்கு நான் அவனை துப்பாக்கியால் சுட்டேன் என்று கட்டுக்கதை விடுகிறார்கள்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால்
ஆட்சியாளர்கள் மக்களை மதிக்காமல் சர்வாதிகாரபோக்கை கடைபிடிக்கிரார்களோ,
அதுபோலவே, காக்கி சட்டை அணிந்துவிட்டால், கூட துப்பாக்கி இருந்துவிட்டால் நான்தான் பெரியவன், நான் சொல்வதைத்தான் அனைவரும் கேட்கவேண்டும், மக்களை மிரட்டுவது என்று அதிகார திமிர் அவர்களிடத்திலே உள்ளது.
அதை பல இடங்களில் நாம் நேரடியாக கண்டு வருகிறோம்.
தனக்கு மேல் சட்டம் உள்ளது, நீதிமன்றங்கள் உள்ளது என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. அதற்கு மாறாக தனக்கு பிடிக்காதவர்களை எப்படியாவது பொய் வழக்கு போட்டு சித்ரவதை செய்வது அல்லது போலிமோதல்கள் மூலம் அவர்களை கொள்வது என்று சட்டத்திற்கு மாறாக நடக்கிறார்கள்.
இது ஏதோ ஒருவர், எங்கோ ஒரு இடத்தில தான் நடைபெறுகின்றன என்பதுபோல சாதாரணமாக இருக்க முடியாது.
பல இடங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன.
அதிலும் குறிப்பாக இதுபோன்ற காவல்நிலைய மரணங்கள் சிறுபான்மை ஒடுக்கப்பட்ட மக்கள் மீதே அதிகம் நடக்கின்றன.
இது எதை காட்டுகின்றன காவல்துறை பயிற்சியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்தோட்டங்கள் உருவாக்கபடுகின்றனவா என்ற ஐயம் எழுகிறது.
காவல்துறையில் இஸ்லாமியர்கள் இருப்பது அரிதிலும் அரிதாக இருக்கிறது. விதிவிலக்காக இருக்கும் சில இஸ்லாமிய காவல்துறை அதிகாரிகளையும் மேலதிகாரிகள் அவர்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள் அல்லது ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்ற பல சம்பவங்கள் நடக்கின்றன.
பொதுவாக காவல்துறை அதிகாரிகள் மீது பொது மக்கள் புகார் கொடுக்கவே தயங்குகிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் அல்லது நம்மை பழிவாங்குவார்கள் என்று எண்ணம் தான்.
புகார் கொடுத்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்,
சம்பத்தப்பட்ட அதிகாரியை காப்பாற்றவே மேலதிகாரிகள் முயல்கிறார்கள். அதிகார துஸ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் மீது பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் புகாரை பதிவு செய்யவே பெரிய போராட்டம் நடத்த வேண்டியதாகியுள்ளது.
காவல்துறையினருக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளில்
கொடுக்கப்பட்டுள்ள புகார்கள் சுமார் 2 லச்சதிற்குமேல்,
இதில் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன,
விசாரணை முடிந்து குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது வெறும் 238 பேர் தான்.
எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறையினரை டிஸ்மிஸ் செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிந்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
அப்போதுதான் இனியும் இதுபோல நடக்காமல் இருக்கும்.
- வி.களத்தூர் பாரூக்
காவல்நிலைய மரணங்களுக்கு எதிராக எழுவோம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:54:00
Rating:
No comments: