அக். 26-ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாம்
பெரம்பலூர், அக். 23: பெரம்பலூர் மாவட்டத்தில், அக். 26-ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்
நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2015-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி 15.10.2014 முதல் 10.11.2014 வரை நடைபெறுகிறது.
அதன்படி, 1.1.2015-ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு 18 வயது பூர்த்தியான நபர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி ஆகிய திருத்தங்களை
மெற்கொள்ளவும், பெயரை நீக்கம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான சிறப்பு முகாம் அக். 26 நவ. 2-ம் தேதிகளில் அந்தந்த வாக்கு சாவடிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் பிழைகள் ஏற்படுவதை தவிர்க்க
ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்ங்ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ர்ய் என்ற இணைளத்தில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல் ஆகிய கோரிக்கைகளை பதிவு
செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இணையத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பதாரர்கள்
தங்களது வண்ண புகைப்படம் ஒன்றை கொண்டுவர வேண்டும்.
இணையதளத்தில் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் நகல் எடுத்து, சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு விசாரணைக்காக அனுப்பப்படும். இணைளம்
மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ளும்போது வயது மற்றும் இருப்பிடத்திற்கான
ஆதாரத்தின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாள்களை தவிர, இதர நாள்களில் விண்ணப்பதாரர்கள் தங்களது பகுதிக்கு அருகில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் இயங்கும்
பொதுச்சேவை மையங்கள், புதுவாழ்வுத் திட்ட வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள கணினி மையம் மூலமாக
பதிவு செய்யலாம். கோரிக்கை ஒன்றுக்கு ரூ. 10, நகல் எடுக்க ஒரு பக்கத்திற்கு ரூ. 3 கட்டணம் செலுத்த வேண்டும்.
அக். 26-ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு முகாம்
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:28:00
Rating:
No comments: