பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் துவக்கம் 12ம் தேதி வரை பெறலாம்

பெரம்பலூர், :  பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நேற்று துவங்கியது. இதை 12ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் (பொ) சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரி சுத் தொகுப்பு வழங்கும் விழா பாளையம் ரேஷன் கடை முன்பாக நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு  வேளாண் விற்பனை வாரியத் தலைவர் ரவிச்சந்திரன், பெரம்பலூர் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவுக்கு தலைமை வகித்த பெரம்பலூர் கலெக்டர் (பொ) சுப்பிரமணியன், பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தைத் துவக்கிவைத்துப் பேசியதாவது:
   தமிழக அரசு உத்தரவுப் படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன்  கடைகளில் அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் பொங்கல் பண்டிகைக் கான இதர பொருட்கள் வாங்குவதற்காக ரூ.100 ரொக்கம், விலையில்லா வேஷ்டி, சேலை உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதன்படி பெரம்பலூர் தாலுகாவில் 42 ஆயிரத்து 535 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும், 272 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 70 முகாம் வாழ் இலங்கைத் தமிழர் அட்டைதாரர்களுக்கும், 42 ஆயிரத்து 877 கிலோ வீதம் பச்சரிசியும், சர்க்கரையும் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.
வேப்பந்தட்டை தாலுகாவில் 43 ஆயிரத்து 364 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும், 36 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 43 ஆயிரத்து 400 கிலோ வீதம் பச்சரிசியும், சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குன்னம் தாலுகாவில் 44 ஆயிரத்து 333 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர் களுக்கும், 16 காவலர் குடும்ப அட்டைதாரரர்களுக்கும், 44 ஆயிரத்து 349 கிலோ பச்சரிசியும், சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆலத்தூர் தாலுக்காவில் 30 ஆயி ரத்து 172 அரிசி விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கும், 20 காவலர் குடும்ப அட்டைதாரர்களுக் கும், 30 ஆயிரத்து 192 கிலோ வீதம் பச்சரிசியும், சர்க்கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இம் மாவட்டத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 818 கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன், தலா ரூ.100 வீதம் ரூ.1 கோடியே 60 லட்சத்து 81 ஆயிரத்து 800 மதிப்புடன் கூடிய பொங்கல் பரிசுப் பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 56 ஆயிரத்து 987 ஆண்களுக்கு வேஷ் டியும், 1 லட்சத்து59 ஆயி ரத்து 2 பெண்களுக்கு  சேலையும் ரேஷன் கடை கள் மூலமாக விநியோகம் செய்யப்பட உள்ளன.இந்த பரிசுத் தொகுப்பை இம் மாதம் 12ம் தேதி வரை வார்டு வாரியாகப் பெற்றுக்கொள்ளலாம் என் றார்.
விழாவில் ஒன்றியக் குழுத் தலைவர்கள் மருதைராஜ், வெண்ணிலா, ஜெயலட்சுமி, நகராட்சி தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர், பேரூராட்சி தலைவர் பாப்பம்மாள், துணைத் தலைவர் செந்தில்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவா ளர் உமாமகேஸ்வரி, டிஎஸ்ஓ ராஜேந்திரன், கூட்டுறவு சங்கத் தலைவர் கள் ராஜாராம், ராஜேஸ் வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, குரும்பலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் செல்வராஜ் வரவேற்றார்.அரியலூர் அருகே
பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் துவக்கம் 12ம் தேதி வரை பெறலாம் பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் துவக்கம் 12ம் தேதி வரை பெறலாம் Reviewed by நமதூர் செய்திகள் on 20:07:00 Rating: 5

No comments:

Powered by Blogger.