சமூகப் பாதுகாப்புத் திட்ட விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன. 8) சமூகப் பாதுகாப்புத் திட்ட விழிப்புணர்வு முகாம், கட்டுமானம், அமைப்புசாரா மற்றும் ஓட்டுநர் தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து பெரம்பலூர் சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் அலுவலர் அசோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் அதிகப்படியான தொழிலாளர்களை பதிவு செய்யவும், வாரியங்களின் செயல்பாடுகளை தொழிலாளர்கள் அறியும் வகையிலும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை காலை 10 மணியளவில், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.
உறுப்பினராகச் சேர விரும்பவோர் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளி மாற்றுச்சான்றிதழ், அரசு அங்கீகரிக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வர வேண்டும்.
சமூகப் பாதுகாப்புத் திட்ட விழிப்புணர்வு முகாம்
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:08:00
Rating:
No comments: