பெரம்பலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு 198 பேர் பங்கேற்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கான வீரர்கள் நியமனத்திற்கு 28 பெண்கள் உள்பட 198 பேர் கலந்து கொண்டனர்.
57 பணிஇடங்களுக்கு
பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் வீரர்கள் காலியாக உள்ள ஆண்கள்– 34 மற்றும் பெண்கள்–23 மொத்தம் 57 பணிஇடங்களுக்கு நியமனம் செய்வதற்கான வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு முகாம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்தசாரதி, ஊர்க்காவல் படை மண்டல தளபதி ஜெ.அரவிந்தன் முன்னிலையில் சப்இன்ஸ்பெக்டர் மதுமதி, ஊர்க்காவல் படை தளபதி தர்மராஜ், உடற்கல்வி ஆசிரியர் நாகராஜன் ஆகியோர் சான்றிதழ்களை சரி பார்த்து, உடல் தகுதியை பரி சோதித்து தேர்வு செய்தனர்.
45 நாட்கள் கவாத்து பயிற்சி
இந்த முகாமில் பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஒன்றியங்களில் இருந்து 28 பெண்கள் உள்பட 198 பேர் கலந்து கொண்டனர். ஊர்க்காவல் படைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர்கள் 3 ஆண்டுகள் கட்டாயம் தொடர்ந்து பணிக்கு வருகை தர வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஊர்க்காவல் படைக்கு தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் பெண்களுக்கு இலவச சீருடை வழங்கப்படும். 45 நாட்கள் கவாத்து பயிற்சி அளிக்கப்படும் என்று மண்டல தளபதி அரவிந்தன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு 198 பேர் பங்கேற்பு
Reviewed by நமதூர் செய்திகள்
on
19:49:00
Rating:
No comments: