வரத்து அதிகரிப்பு தக்காளி விலை கடும் வீழ்ச்சி பெரம்பலூரில் கிலோ ரூ.8க்கு விற்பனை

பெரம்பலூர், : சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி விலையில் தற்போது 5 மடங்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரில் நவம்பரில் ரூ.43க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.8க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் தக்காளி இல்லாத ரசமோ, சாம் பாரோ ருசிப் பதில்லை. அன்றாட உணவில் அடிப்படைத் தேவையாகிவிட்ட தக்காளி பண்டிகை தற்போது பொங்கல் சீசனில் விலை வீழ்ச்சி கண்டிருப்பது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் உழவர் சந்தைக்கு, அருகில் உள்ள நொச்சியம், அரணாரை, கோனேரிப்பாளையம், அரசலூர், அன்னமங்கலம், பாண்டகப்பாடி, பெரியவடகரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து சாகுபடியான நாட்டுத் தக்காளி நேரடியாகக் கொண்டுவரப்பட்டு  விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
குறிப்பாக நொச்சியம் கிராமத்தில் இருந்து மட்டும் நாளொன்றுக்கு 200 கிலோ தக்காளி கொண்டுவரப்பட்டு மிச்சம் மீதியின்றி அன்றே விற்றுத் தீர்ந்து விடும். மாவட்டத்தின் பல் வேறு கிராமங்களிலிருந்து பெரம்பலூர் உழவர் சந்தைக்கு தினமும் 700 கிலோவுக்கு குறையாமல் நாட்டு தக்காளி கொண்டுவரப்பட்டு சில மணி நேரங் களில் விற்பனையாகிறது.
இதே போல் ஹைபிரிட் ரகத்தைச் சேர்ந்த தக்காளி மகளிர் சுய உதவிக் குழுக்க ளால் தினமும் 1500 கிலோவுக்கு குறையாமல் எடுத்து வந்து விற்கப்படுகிறது. இதன் மூலம் உழவர் சந்தையில் தக்காளி மட்டும் 2 டன்னுக்கு மேலாக தின மும் விற்பனையாகிறது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் கிலோ ரூ.43க்கு விற்கப்பட்ட தக்காளி, 15 நாட்களுக்கு முன்னர் வரை ரூ.13க்கு விற்கப்பட்டது. தற்போது கிலோ ரூ.8 வீதம் விற்கப்படுகிறது. இந்த மாபெரும் விலை வீழ்ச்சிக்கு, தக்காளியின் வரத்து அதிகரிப்பே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இன்னும் ஒரு வாரத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப் பட உள்ள நிலையில் தக்காளி விலை வீழ்ச்சி பொதுமக்களிடையே பெரும் கொண் டாட்டமாக உள்ளது. இதனால் பலர் 3 கிலோ, 5 கிலோ என விலைக்கு வாங்கி வீடுகளில் தக்காளி ஊறுகாய் செய்துவருகின்றனர்.
அதே நேரம் தக்காளி எளிதில் அழுகி விடும் பழம் என்பதாலும், அதை பத்திரப்படுத்தி, இருப்பு வைத்து விலை அதிகரிக்கும் போது, கூடுதல் விலை வைத்து விற்க முடியாத நிலை உள்ளதாலும் கிடைக்கும் விலைக்கு விற்றுவரும் வியாபாரிகள் பாடுதான் திண்டாட்டமாக உள்ளது.
வரத்து அதிகரிப்பு தக்காளி விலை கடும் வீழ்ச்சி பெரம்பலூரில் கிலோ ரூ.8க்கு விற்பனை வரத்து அதிகரிப்பு தக்காளி விலை கடும் வீழ்ச்சி பெரம்பலூரில் கிலோ ரூ.8க்கு விற்பனை Reviewed by நமதூர் செய்திகள் on 19:51:00 Rating: 5

No comments:

Powered by Blogger.