ரூ. 9.14 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

பெரம்பலூர் அருகேயுள்ள எசனை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில், 74 பயனாளிகளுக்கு ரூ. 9.14 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி ஆட்சியர் மேலும் பேசியது: விபத்தில் மரணமடைந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரண உதவித் தொகை, இயற்கை மரணமடைந்த 7 நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 87,500, விதவை உதவித்தொகை 5 நபர்களுக்கு ரூ. 3 லட்சம், கணவனால் கைவிடப்பட்ட ஒருவருக்கு உதவித்தொகை ரூ. 60,000, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு முதியோர் உதவித் தொகை ரூ. 60,000 ஆகியவற்றுக்கான  காசோலைகளும், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் விசைதெளிப்பான், தெளிப்புநீர் கருவி மற்றும் தென்னங்கன்று வழங்கும் திட்டங்களின் கீழ், 11 நபர்களுக்கு ரூ. 1,67,115 மதிப்பிலான நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம், 2 நபர்களுக்கு ரூ. 5,200 மதிப்பிலான சலவைப்பெட்டி, 4 நபர்களுக்கு ரூ. 14,400 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், 4 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை, 35 நபர்களுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகள் என, 74 பயனாளிகளுக்கு ரூ. 9,14,715 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ். ராஜேந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகசபை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மனோகர், எசனை ஊராட்சித் தலைவர் ராமதேவ், வட்டாட்சியர் அ. ரெங்கராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரூ. 9.14 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் ரூ. 9.14 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் Reviewed by நமதூர் செய்திகள் on 19:51:00 Rating: 5

No comments:

Powered by Blogger.