கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உதவியாளர்களுக்கு 4-ம் நிலை டி பிரிவு காலமுறை ஊதியமும், பதவி உயர்வும் வழங்க வேண்டும். மற்ற அலுவலர்களுக்கு வழங்குவது போல, நாள் கணக்கிட்டு பொங்கல் பண்டிகைக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

அரசின் உத்தரவு களையும், ஏற்றுக் கொண்ட கோரிக்கை களையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த தர்ணா ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.
கிராம உதவியாளர் சங்க மாநில துணை தலைவர் வி. பெரியசாமி, அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் கஜேந்திரன், மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் கிராம உதவியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் என். பெரியசாமி, மாவட்ட செயலாளர் மு. பிச்சை மற்றும் தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் சங்கத் தினர் திரளான பேர் கலந்து கொண்டனர்.

கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Reviewed by நமதூர் செய்திகள் on 23:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.