10 ரூபாய் டாக்டர்!

10 ரூபாய் டாக்டர்!

தென்காசியில் மருத்துவர் ஒருவர் பத்து ரூபாய்க்கு மக்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறார்.
தென்காசி, வாய்க்கால் பாலம் அருகில் ராமசாமி என்பவர் கிளினிக் நடத்தி வருகிறார். இங்கு, எப்போதுமே மக்கள் கூட்டம் அலை மோதும். அந்தப் பகுதி மக்கள் அவரை பத்து ரூபாய் மருத்துவர் என்றுதான் அழைப்பர்.
இதுகுறித்து மருத்துவர் ராமசாமி கூறுகையில், நான் கல்லூரியில் படிக்கும்போது மருத்துவம் மிகச் சிறந்த சேவை என்று பேராசிரியர்கள் எங்களுக்கு கற்று கொடுத்தனர். நான் கடந்த நாற்பத்தாறு ஆண்டுகளாக இந்த சேவையை செய்து வருகிறேன். ஆரம்பத்தில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு செய்து வந்த சேவையை தற்போது பத்து ரூபாய்க்கு செய்து வருகிறேன்.
கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் என்ற ஊரில் பிறந்த நான், அம்பாசமுத்திரம் அரசுப்பள்ளியில் படித்தேன். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் படிப்பு முடிந்ததும் கருங்குளம் அரசு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒய்வு நேரத்தில் மக்களுக்கு சேவை செய்யலாம் என்று நினைத்து கருங்குளத்தில் ஆரம்பித்த கிளினிக் மூலம் இன்றுவரை மருத்துவம் செய்து வருகிறேன். இதுமட்டுமல்லாமல், சில பேருக்கு பயணச் செலவுக்குக் காசு கொடுத்து அனுப்பி வைப்பேன்.
மக்களுக்கு மருத்துவத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை. நம் நாட்டில் மருத்துவத்தில் அதிகமான பாகுபாடு நிலவிவருகிறது. ஏழைகளுக்கு அரசு மருத்துவமனை, பணக்காரா்களுக்குத் தனியார் மருத்துவமனை என்ற நிலை இருக்கிறது. அரசு மக்களுக்கு நல்ல மருத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்.
மருத்துவம் என்பது சேவை. சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள் மட்டும்தான் மருத்துவம் படிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
10 ரூபாய் டாக்டர்! 10 ரூபாய் டாக்டர்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:48:00 Rating: 5

No comments:

Powered by Blogger.