குண்டர் சட்டத்தால் தேர்வெழுத மறுப்பு: வளர்மதி

குண்டர் சட்டத்தால் தேர்வெழுத மறுப்பு: வளர்மதி

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டும் தேர்வெழுத அனுமதி மறுக்கப்படுவதாக மாணவி வளர்மதி குற்றம் சாட்டியுள்ளார்.
கதிராமங்கலம் மக்கள் போராட்டத்துக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழக இதழியல் துறை மாணவி வளர்மதி, சேலம் கோரிமேடு பெண்கள் கல்லூரி முன்பு துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஜூலை 13ஆம் தேதி சேலம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், மாணவர்களைத் தூண்டிவிட்டு கிளர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறி ஜூலை 17-ஆம் தேதி வளர்மதியைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் காவல் ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதைக் காரணம் காட்டி, அவர் இதழியல் படித்து வந்த பெரியார் பல்கலைக்கழகம் அவரை இடைநீக்கம் செய்தது.
இந்நிலையில் மாணவியின் தந்தை, மகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து செப் 5ஆம் தேதி மாணவி வளர்மதி மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்துசெய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது இடை நீக்கத்தையும் ரத்து செய்து பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில் வருகைப்பதிவேடு இல்லை என்று மாணவி வளர்மதியைத் தேர்வெழுத பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது இதை எதிர்த்து, நேற்று (அக் 12) மாணவர் கூட்டமைப்பு இணைந்து, செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது மாணவர்கள் கூட்டமைப்பினர் கூறியதாவது, “ இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தைக் கணக்கிலெடுக்காமல், அதற்குப் பிறகான காலத்தில் அவருடைய வருகை எண்ணிக்கையைவைத்துத் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்” என்று ஏற்கனவே ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி வளர்மதி ஒரே ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்திருக்கிறார். அவர் தேர்வு எழுதத் தகுதியானவர். காவல்துறை மற்றும் அரசின் குற்றச்சாட்டை நிராகரித்த பிறகும் அவர் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
மேலும் பல்கலை கழகத்தின் இந்தச் செயல் போராடும் மாணவர்களை நசுக்குவதாகவும் அச்சுறுத்தும் வகையிலும் உள்ளது. மாணவியை மீண்டும் தேவெழுத அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
இதுகுறித்து மாணவி வளர்மதி கூறியதாவது ,” குண்டர் சட்டம் செல்லாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அலைக்கழித்த பிறகே கல்லூரியில் மீண்டும் சேர அனுமதித்தனர். நான் ஒரு நாள் மட்டுமே விடுத்து எடுத்திருக்கிறேன் ஆனால் 15% தான் வருகை பதிவேடு இருப்பதாகக் கூறி என்னை தேவெழுத அனுமதி மறுக்கின்றனர்.அடுத்த செமஸ்டரில் கூட அனுமதிக்காமல் அடுத்த ஆண்டுதான் தேர்வெழுத அனுமதிக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. எனவே இதுதொடர்பாக இரு தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான் தேர்வெழுத அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
குண்டர் சட்டத்தால் தேர்வெழுத மறுப்பு: வளர்மதி குண்டர் சட்டத்தால் தேர்வெழுத மறுப்பு: வளர்மதி Reviewed by நமதூர் செய்திகள் on 04:00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.