குஜராத் தேர்தல்: ’மின்னணு வாக்கு எந்திரத்தின் அதிசயத்தால் இது நிகழலாம்’

குஜராத் தேர்தலில் பாஜக வெற்றிபெற வாய்ப்பில்லை என மஹாராஷ்டிரா நவநிர்மன் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.
மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் டிச.9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிச.18ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குஜராத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மஹாராஷ்டிரா நவநிர்மன் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, இத்தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என்றும், ஒருவேளை 150 தொகுதிகளுக்குமேல் பாஜக வெற்றிபெற்றால் அது வாக்கு எந்திரந்தால் ஏற்பட்ட மிகப்பெரிய அதிசயம் எனவும் கருத வேண்டும் என்றார். மேலும் அவர், பிரதமர் மோடி உரையாற்றும் கூட்டங்களில், அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே கூட்டத்தை விட்டு மக்கள் வெளியேறிச் செல்லும் காட்சிகள் சமீப காலமாக பார்க்க முடிகிறது என்றும், இதற்கு முன்னர் இதுபோன்று நடந்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
குஜராத் தேர்தல்: ’மின்னணு வாக்கு எந்திரத்தின் அதிசயத்தால் இது நிகழலாம்’ குஜராத் தேர்தல்: ’மின்னணு வாக்கு எந்திரத்தின் அதிசயத்தால் இது நிகழலாம்’ Reviewed by நமதூர் செய்திகள் on 00:00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.