’கறுப்புப் பணம் எவ்வளவு வந்துள்ளது?’

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் கறுப்புப் பணம் எவ்வளவு வந்துள்ளது என மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி, ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அதற்கு பதிலாக புதிய ஐநூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படுவதாகவும் அறிவித்தார். கறுப்பு பணம், ஊழல், கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
அரசின் இந்த நடவடிக்கையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் நலிவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பணத்தை மாற்றிக்கொள்ள வங்கி வரிசையில் நின்று பலர் உயிரிழந்தனர். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை முதலில் ஆதரித்தவர்களே, தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காரணம் கறுப்புப் பணம் ஒழியும் எனக் கூறப்பட்டிருந்தநிலையில் ஏறக்குறைய 99 சதவிகித பணமும் வங்கிகளுக்குத் திரும்பி விட்டது. இதனையடுத்து நவ.8ஆம் தேதியை கறுப்பு தினமாக எதிர்க்கட்சிகள் அனுசரிக்கவுள்ளனர்.
இது குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் கறுப்புப் பணம் எவ்வளவு வந்துள்ளது என்பதை மத்திய அரசு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார். மேலும், நவ.8ஆம் தேதி கறுப்புப் பணத்துக்கு எதிரான நாளாக அனுசரிக்கப் போவாதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளது குறித்துப் பேசிய அவர், பாஜகவின் இதுபோன்ற தந்திர அரசியலை மக்கள் மதிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
’கறுப்புப் பணம் எவ்வளவு வந்துள்ளது?’ ’கறுப்புப் பணம் எவ்வளவு வந்துள்ளது?’ Reviewed by நமதூர் செய்திகள் on 01:13:00 Rating: 5

No comments:

Powered by Blogger.