பசி பட்டினியில் இந்தியா!
பசி, பட்டினியால் வாடும் மக்கள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 97ஆவது இடத்திலிருந்து 100ஆவது இடதுக்குச் சென்றுள்ளது.
சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சிக் கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. பசி, பட்டினியால் வாடும் நாடுகள் குறித்து ஆய்வு நடத்தி அதன் பட்டியலை நேற்று (அக் 12) வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியா 100ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆசிய அளவில் இந்தியா 3ஆவது இடத்திலும் முதல் இரண்டு இடங்களில் ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் உள்ளன.
இதையடுத்து சீனா (29), நேபாளம் (72), மியான்மர் (77), இலங்கை (84), வங்கதேசம் (88),), வடகொரியா (93), ஈராக் (78) ஆகிய இடங்களில் உள்ளன
குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு, எடை மற்றும் வளர்ச்சி குறைபாடு, குழந்தை இறப்பு விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பசி, பட்டினியால் அதிக அளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தையின் உடல் எடை இருக்க வேண்டிய அளவைவிட மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துப்படி இந்தியா அபாய நிலையிலுள்ள நாடுகளில் ஒன்றாக இருப்பது தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டிற்குள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக இந்தியாவை மாற்றச் செயல்பட்டுவருவதாக அரசு கூறுகிறது. இந்நிலையில் தற்போது வெளியான சர்வதேசப் பட்டியலின் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
பசி பட்டினியில் இந்தியா!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:55:00
Rating:
No comments: