குஜராத் அரசியல் மூவ்: தடுமாறும் பாஜக!

குஜராத் அரசியல் மூவ்: தடுமாறும் பாஜக!
ஆமதாபாத்(14 அக் 2017): எதிர் வரும் குஜராத் தேர்தலில் பாஜக மண்ணை கவ்வும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
குஜராத்தின் மாதிரியை பாதுகாக்க பாஜக பெரும் பாடு பட்டு வருகிறது. இதற்காக பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளி உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை முன்னிலை படுத்தி வருகிறது.
இதற்காக குஜராத் கௌரவ யாத்திரை பரப்புரைக்காக யோகியை அழைத்துள்ளது. குஜராத்தின் மத்திய பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த இடமான கராம்சாதிலிருந்து அக்டோபர் முதல் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பர்டி நகரம், வல்சாத் நகரம், சிக்லி மற்றும் தெற்கு குஜராத்திலுள்ள பிற இடங்களிலும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் ஆதித்யநாத் பேசியுள்ளார். கட்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் பரப்புரையிலும் யோகி கலந்து கொள்கிறார்.
அதேவேளை பாரதிய ஜனதா கட்சி யோகி ஆதித்யநாத்தை அழைத்திருப்பது, அந்த கட்சி எதை நோக்கி சாய்கிறது என்பதை காட்டுகிறது. "முதலில், குஜராத் கௌரவ யாத்திரை பாஜகவின் பாரம்பரிய கோட்டையான சௌராஸ்டிரா பிராந்தியத்தில் நல்ல வரவேற்பை பெறவில்லை. உண்மையில், இது ஓ.பி.சி. பிரிவின் கீழ் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு கோரி வரும் பட்டேல் இனத்தவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயிர் காப்பீடு, நர்மதா நீர் உள்பட இன்னும் பல பிரச்சனைகளாலும் அரசு மீது விவசாயிகளும் கோபத்தில் உள்ளனர்.
சௌராஸ்டிராவில் உள்ள சில கிராமங்களில் நடந்த போராட்டத்தினால், அங்கு யாத்திரை நுழையக் கூட முடியவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் பாரம்பரிய கோட்டையாக இருக்கும் சௌராஸ்டிராவில் பாஜகவுக்கு இது நல்ல அறிகுறி அல்ல என்று ராஜ்காட்டை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கிரிட்சிங் ஸலா கூறியுள்ளார்.
இதுவரை தாக்குதல் நிலையில் இருந்துள்ள பாஜக தற்போது தற்காத்து கொள்ளும் நிலையில் உள்ளது.
குஜராத் அரசியல் மூவ்: தடுமாறும் பாஜக! குஜராத் அரசியல் மூவ்: தடுமாறும் பாஜக! Reviewed by நமதூர் செய்திகள் on 04:22:00 Rating: 5

No comments:

Powered by Blogger.