இந்தியாவின் மிகப்பெரும் இயக்கம் பலஸ்தீன் ஆதரவு அமைப்போடு கைகோர்த்தது


8 மில்லியன் உறுப்பினர்களை கொண்ட இந்தியாவின் மிகப்பெரும் இயக்கமான அகில இந்திய கிஷான் சபா,BDSஎனும் பலஸ்தீன ஆதரவு அமைப்பில் அங்கம் வகிக்கிறது.
இந்தியா முழுவதும் சுமார் 8 மில்லியன் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட அகில இந்திய கிஷான் சபா, BDS அமைப்பில் இணையப்போவதாக அறிவித்தது. அகில இந்திய கிஷான் சபா இந்தியாவில் 21 மாநிலகளில் செயல்பட்டுவருகிறது
இஸ்ரேல் புறக்கணிப்பு,முதலீடுகளை திரும்பப்பெருதல் மற்றும் இஸ்ரேலுக்கு பொருளாதார ரீதியிலான தடைகளை ஏற்படுத்துதல் என்ற நோக்கில் BDS (Boycott, Divestment and Sanctions) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பில் கிஷான் சபாவும் இணையப்போவதாக அறிவித்துள்ளது,மேலும் இது சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டது என்று கிஷான் சபா தெரிவித்துள்ளது,பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் இந்திய விவசாயத்தை இஸ்ரேலிய கார்ப்பரேட்டுகள் கைப்பற்றும் முயற்சியை தடுக்கும் விதமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது
இந்திய வேளாண் துறையில் இஸ்ரேலிய பெருநிறுவன கையகப்படுத்துதலின் எந்தவொரு சம்பவத்தையும் ஆவண செய்யுமாறு தனது உறுப்பினர்களுக்கு கிஷான் சபா கேட்டுக்கொண்டது
பாலஸ்தீனத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் இனவெறி ஆகியவற்றிற்கு நிதியளிக்கும் இலாபம் சம்பாதிப்பதில் இருந்து இஸ்ரேல் மற்றும் அதன் பெருநிறுவனங்களை தடுக்க, இந்திய விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கிஷான் சபா வேண்டிக்கொண்டது
இது குறித்து பலஸ்தீனுக்கான BDS தேசிய குழுவின் தெற்காசிய ஒருங்கிணைப்பாளர் அபூர்வா கூறுகையில்:
இந்தியா-பலஸ்தீனுக்கு அளிக்கும் ஆதரவு என்பது புதிதல்ல,அதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது.அகில இந்திய கிஷான் சபா பலஸ்தீன் மக்களுக்கும், BDSக்கும் ஆதரவு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்று இந்தியா, பாலஸ்தீனம் மற்றும் அதிலிருக்கும் அடிமட்ட மக்கள் இயக்கங்கள் வலதுசாரி அரசியலின் வன்முறை அலைகளை இன்று தோற்கடிப்பதற்காக வேலை செய்கின்றன. BDS அமைப்பில் இணைவதன் மூலம், பிரதமர் மோடி, நெத்தன்யாகு மற்றும் டிரம்ப்பின் வெறுப்பு நிறைந்த அரசியலில் விருப்பம் இல்லை என்று கிஷான் சபா உறுதிப்படுத்டியிருக்கிறது. மேலும் சுதந்திரமான, சமமான உலகத்தை உருவாக்க எங்களுக்கு இது உதவியாக இருக்கும்.இவ்வாறு அபூர்வா தெரிவித்தார்
அகில இந்திய கிஷான் சபா 1936ல் சுதந்திரத்திற்கு முன்பே உறுவாக்கப்பட்டது.இது விவசாயிகளை ஒருங்கிணைத்து பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் முக்கிய பங்காற்றியது.
சமீபகாலங்களில் கிஷான் சபா இந்திய விவசாயத்துறையை கார்ப்பரேட்டுகளின் கையகப்படுத்தும் முயற்சியை எதிர்த்து தீவிரமாக போராடி வருகிறது.
பலஸ்தீன் BDSஅமைப்பு பலஸ்தீனத்தில் இருக்கும் சிவில் சமூகத்தின் கூட்டனி அமைப்பாகும்.இது தொடர்ந்து இஸ்ரேல் புறக்கணிப்பு,முதலீடுகளை திரும்பப்பெருதல் மற்றும் இஸ்ரேலுக்கு பொருளாதார ரீதியிலான தடைகளை ஏற்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை முன்னனியில் இருந்து செயல்படுத்தி வருகிறது
இந்தியாவின் மிகப்பெரும் இயக்கம் பலஸ்தீன் ஆதரவு அமைப்போடு கைகோர்த்தது இந்தியாவின் மிகப்பெரும் இயக்கம் பலஸ்தீன் ஆதரவு அமைப்போடு கைகோர்த்தது Reviewed by நமதூர் செய்திகள் on 00:58:00 Rating: 5

No comments:

Powered by Blogger.