7 வருடங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஆயுர்வேதா கல்வி நிறுவனத்தை மீண்டும் திறந்த மோடி
மக்களுக்கு பயனுள்ள புதிய திட்டங்கள் எதனையும் அறிமுகம் செய்யாமல் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களை திறந்து வைத்தே பழக்கப்பட்ட மோடி தற்போது ஏழு வருடங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட அனைத்திந்திய ஆயுர்வேதா கல்வி நிறுவனத்தை மீண்டும் திறந்து வைத்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் திறக்கப்பட்ட கல்வி நிறுவனத்தை திறந்து வைத்ததோடு நிற்காமல் அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, காங்கிரஸ் கட்சி இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் பாரம்பரியத்தை கண்டுகொள்ளவில்லை என்று மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்களது பாரம்பரியத்தை மறந்த தேசம் தங்களது அடையாளத்தை இழந்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கல்வி நிறுவனம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மோடி, நாட்டின் முதல் ஆயுர்வேத கல்வி நிறுவனத்தை தேசத்திற்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அரசு ஆவணங்களின் அடிப்படையில் இந்த கல்வி நிறுவனம் கடந்த 2010 காங்கிரஸ் ஆட்சியின் போது திமுக கட்சி அமைச்சர் காந்தி செல்வனால் திறக்கப்பட்டுள்ளதாக உள்ளது. மேலும் இந்த நிறுவனத்திற்கு கடந்த ஏழு வருடங்களாக மக்கள் பலர் சிகிச்சைக்கு சென்றும் வந்துள்ளனர்.
இது குறித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிஜாய் சோன்கர் ஷாஷ்திரி யிடம் பத்திரிகையாளர்கள், ஏற்கனவே திறக்கப்பட்ட கல்வி நிறுவனம் ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஏன் திறக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய போது பத்திரிகையாளர்களின் இந்த கூற்றை ஏற்றுக்கொள்ளும் விதமாக, “அதனை நாங்கள் மீண்டும் திறக்க வேண்டியுள்ளது என்றால் UPA அரசின் செயல்பாடு எப்படி இருந்துள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள்” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோடி இந்த கல்வி நிறுவனத்தை தற்போது திறந்த வைத்த போது நாட்டின் பாரம்பரியம் குறித்து வகுப்பெடுத்த பாஜக ஆதரவாளர்கள் அது ஏற்கனவே திறக்கப்பட்டது என்ற செய்தி வெளியானதும் சமூக வலைதளங்களில் சொல்வதறியாது மெளனம் சாதித்து வருகின்றனர்.
7 வருடங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஆயுர்வேதா கல்வி நிறுவனத்தை மீண்டும் திறந்த மோடி
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:58:00
Rating:
No comments: