குஜராத் தேர்தல்: சிதம்பரம் விமர்சனம்!
குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்தும் இந்திய தேர்தல் ஆணையம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
இமாசல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முறையே ஜனவரி 7 மற்றும் 22ம் தேதி முடிவடைகிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் ஒன்றாகத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், இமாசல பிரதேசத்தில் நவம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் டிசம்பர் 18ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஏ.கே. ஜோதி கடந்த 12ம் தேதி அறிவித்தார்.
குஜராத்தின் ஆளும்கட்சியான பாஜவுக்கு ஆதரவாகத்தான் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர்களான குரேஷி, டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் தேர்தல் ஆணையத்தை விமர்சித்துள்ளனர்
இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம் இன்று (அக்.20) காலை தனது ட்விட்டர் பக்கத்தில், குஜராத் அரசு அனைத்துச் சலுகைகள் மற்றும் இலவசங்களை அறிவித்த பின்னரே, தனது நீட்டிக்கப்பட்ட விடுப்பில் இருந்து தேர்தல் ஆணையம் திரும்ப அழைக்கப்படும் எனப் பதிவிட்டுள்ளார். மேலும், ‘ குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் தேதியை தனது பேரணியில் அறிவிக்கப் பிரதமர் மோடிக்குத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டை பலரும் ரி.ட்விட் செய்து வருகின்றனர்.
சிதம்பரம் ட்விட் குறித்து பதிலளித்துள்ள குஜராத் முதல்வர் விஜய் ருபானி, ‘குஜராத் தேர்தல் குறித்து காங்கிரஸுக்கு பயன் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே சிதம்பரம் இதுபோன்ற கருத்துகளை வெளியிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் குறித்து அவர் விமர்சிப்பது நமது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல எனத் தெரிவித்துள்ளார்.
குஜராத் தேர்தல்: சிதம்பரம் விமர்சனம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:45:00
Rating:
No comments: