நீதி வென்றது - த.மு.மு.க அறிக்கை!
சென்னை: பார்சல் வெடிகுண்டு வழக்கில் குற்றவாளிகள் இல்லை என தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ உட்பட 5 பேரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"ஆகஸ்ட் 3, 1995ஆம் ஆண்டில் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பார்சல் வெடிகுண்டு வழக்கில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ உட்பட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் இன்று, சென்னை உயர்நீதிமன்றம், தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ உட்பட 5 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்துள்ளது.
19 ஆண்டுகளாய் நடைபெற்ற இவ்வழக்கில், இறுதியில் நீதி வென்றிருக்கிறது. நீதிக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நீதி வென்றது - த.மு.மு.க அறிக்கை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:16:00
Rating:
No comments: