காவல்துறையின் அத்துமீறலால் இஸ்லாமிய சிறுவன் உயிருக்கு ஆபத்து களமிறங்கும் விடுதலை சிறுத்தைகள் ..
காஞ்சிவரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேணி பகுதியைச்ச் சார்ந்து இசுலாமிய இளைஞன் தோழர் தமீம் அன்சாரி, காவல்நிலைய ஆய்வாளர் புஷ்பராஜ் என்பவரால் துப்பாக்கியால் கழுத்தில் சுட்டு படுகொலை. காஞ்சி மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு. கோவில் உண்டியலை நீ தான் திருடினாய், ஒழுங்காக ஒத்துக்கொள் இல்லைன்றால் உன்னை துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார் காவல்நிலைய ஆய்வாளர் புஷ்பராஜ். தோழர் தமீம் அன்சாரி மறுக்கவே துப்பாக்கியை இசுலாமிய சகோதரன் தமீம் அன்சாரியின் வாயினுள்ளே வைத்து சுட்டுவிடுவேன் ஒழுங்காக ஒத்துக்கொள் மிரட்டியிருக்கின்றார், தொடர்ந்து காவல்நிலைய ஆய்வாளர் புஷ்பராஜ் தமீம் அன்சாரியின் கழுத்தில் சுட்டு இருக்கின்றார். துப்பாக்கியின் குண்டு கழுத்தினுள் சென்று வெளியே வந்திருக்கின்றது. தமீம் தோழர் அன்சாரி அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்திருக்கின்றான். தற்போது தமீம் அன்சாரி உடல் மேடவாக்கம் குளோபல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் இந்த அடக்குமுறையை மனித உரிமை மீறலை கண்டித்து காஞ்சி மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் இன்று 08-01-2013 மாலை 3 மணிக்கு நீலாங்கரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளனர். நமது மாவட்டத்தின் அனைத்துநிலை நிர்வாகிகளும் தவறாமல் உணர்வுடன் பங்கேற்க வேண்டுகிறேன். கவல்துறையினரின் அடக்குமுறைக்கு எதிராக மனிதஉரிமை மீறலுக்கு எதிராக சிறுத்தைகளே சினந்து வாருங்கள். இவண், சூ.க.விடுதலைச்செழியன் காஞ்சி மாவட்ட செயலாளர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி. ------------------------------------------------------------ ஊடக மையம் - காஞ்சிவரம் மாவட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.
காவல்துறையின் அத்துமீறலால் இஸ்லாமிய சிறுவன் உயிருக்கு ஆபத்து களமிறங்கும் விடுதலை சிறுத்தைகள் ..
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:11:00
Rating:
No comments: