முஸஃபர் நகர்:முஸ்லிம் தலைவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறுவதுக் குறித்து முதல் கட்ட அறிக்கை தாக்கல்!
முஸஃபர் நகர்: முஸஃபர் நகர் கலவரத்தில் தொடர்புடைய முஸ்லிம் தலைவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து உத்தரப்பிரதேச அரசுக்கு அந்த மாவட்ட அதிகாரிகள் திங்கள்கிழமை முதல்கட்ட அறிக்கை அனுப்பியுள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் கௌசால் ராஜ் சர்மா தெரிவித்தார். கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு படை முஸ்லிம் தலைவர்களுக்கு எதிரான தங்களது விசாரணையை இன்னும் முடிக்கவில்லை என்றும், அந்த விசாரணை முடியும் வரை, மாவட்ட நிர்வாகத்தால் முழுமையான அறிக்கையை அளிக்க இயலாது என்றும் அவர் கூறினார்.
முஸஃபர்நகர் கலவரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் எம்.பி. காதிர் ராணா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து அறிக்கை அனுப்பும்படி, முஸஃபர்நகர் மாவட்ட அதிகாரிகளை உத்தரப்பிரதேச சட்ட அமைச்சகம் கேட்டுக் கொண்டிருந்தது.
முஸஃபர் நகர்:முஸ்லிம் தலைவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறுவதுக் குறித்து முதல் கட்ட அறிக்கை தாக்கல்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:14:00
Rating:
No comments: